Wednesday, November 18, 2009

காட்சிகளும் கதையும் - 1

கதை 1 :

விக்னேஷ் காரை வழக்கம்போல் பார்க் பண்ணிவிட்டு வீட்டின் காலிங் பெல்லை அழுத்த முற்ப்பட்டபொழுது தான் கவனித்தான் கதவு வழக்கத்திற்கு மாறாக மெலிதாக திறந்து இருந்ததை.
"இவளுக்கு என்ன ஆச்சு"..என்று நினைத்தான். வாணி என்று அழைத்தும் எந்த பதிலும் இல்லை. ஒரு வினோதமான நிசப்தம் வீடு முழுவதும் நிலவியது.. சமையலறையில் நுழைந்து பார்த்தான் ஆளை காணவில்லை..மெலிதாக ஒரு சந்தேகம் படர்ந்தது.."ஒரு வேளை..ச்சே..அப்படி நினைக்க கூட முடியாது..வாணி அப்படி இருக்கமாட்டா..அது வேற இல்லமா நேத்து தான் அவ கூட இரவு முழுக்க உக்கார்ந்து பேசினோம்..
கல்யாணத்திற்கு முன்பு காதல் என்பது பெரும்பாலனவங்க வாழ்கையில சகஜமானது..இப்ப அது குறுக்கிட்ட அதை நம்ம எதார்த்தமா எடுத்துக்கிட்டு கடந்து போய்டனும்..மனசுல அந்த நினைவுகள் எப்பயாவது வந்தா கூட அது உறுத்தலா இல்லாத மாதிரி நம்ம தான் பார்த்துக்கணும்..ஒரு கணவனா இதுக்கு மேல நான் எப்படி உனக்கு விளக்க முடியும்..அது வேற இல்லாமல் நமக்கு குடும்பம் குழந்தைன்னு ஆகிட்ட பிறகு"..என்று நினைத்துக்கொண்டு இருக்கும் பொழுதே "குழந்தை" என்ற வார்த்தை..ஆமாம் மிருதுளா கூட இல்லையே எங்க என்று குழம்பினான்..அவள் மொபைலுக்கு ட்ரை பண்ணால் அனைக்கபட்டு இருந்தது.
"எங்க போய் தொலைஞ்சா.." என்று நினைத்துக்கொண்டு இருக்கும்பொழுதே அறையின் உட்புறம் இருந்த பாத்ரூமில் இருந்து விசும்பல் சத்தம் கேட்டது..உள்ளே நுழைந்து பார்த்தவன் முதலில் கண்ணாடியில் 'ரத்தத்தில்'எழுதி இருந்த வார்த்தைகளை பார்த்து மிரண்டு போனான்.."விலகி போகிறேன் விட்டு விடுங்கள்.."..அதற்கு மேல் பாத் டப்பின் பின்ப்புறம் நிழறுவமாய் ஸ்க்ரீனுக்கு பின் தெரிந்த குழந்தை மிருதுளாவின் உருவத்தை பார்த்தவுடன் தலை சுற்றியது..
(நிகழ்வுகளால் நிரப்பப்பட்டதே சம்பவம்..அனால் நிகழ்வுகளை மட்டும் வைத்தே நம் சம்பவத்தின் தன்மையை அறிவது கடினம்..ஏன் என்றால் நிகழ்வுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவரின் பார்வையில் மாறுப்படும்..பலரின் பார்வையை வைத்து தீர்மானிப்பதே நிகழ்வின் உண்மையை விளக்கும்)..

கதை 2 :

ராஜா அந்த நள்ளிரவிலும் தன் ஜீப்பை வேகமாக செலுத்தி கொண்டு இருந்தான்..இங்கே "புதுசத்திரத்திற்கு" ட்ரன்ஸ்ஃபர் ஆகி பத்து நாட்கள் தான் ஆகி இருந்தது.வரிசையாக நடந்த நான்கு கொலைகள் தான் அவனை இந்த ஊருக்கு மாற்றி இருந்தது .மேலதிகாரிகள் இவன் மேல் வைத்து இருந்த நம்பிக்கை.முன்னாடி இருந்த இன்ஸ்பெக்டர் ஒரு அடி கூட இந்த கேசில் முன்னேற முடியாதது.இவை எல்லாம் காரணமாக இருந்து மூனே மூன்று நாட்களில் எல்லாம் முடிந்து ட்ரான்ஸ்ஃபர் நிறைவேற்றப்பட்டு இருந்தது.பத்து நாட்கள் ஆகியும் ராப்பகலாக அலைந்தும் ஒரு துப்பு கூட அவனுக்கும் கிடைக்கவில்லை..ஒரே ஒரு விஷயம் தவிர்த்து ..

இறந்தவர்கள் அனைவரும் வெளியூரை சேர்ந்தவர்கள்..குறிப்பாக கல்யாணம் ஆன பெண்கள்..அதுவும் அந்த உள்ளுர் "பிரபல சாமியாரை" பார்த்துவிட்டு வந்தப்பிறகு தான் அனைத்து கொலைகளும் நடந்து உள்ளது..ஆனால் எதனால்?..இதற்கு மட்டும் ராஜாவால் அத்தனை எளிதாக விடை கண்டுப்பிடிக்கவில்லை இவ்வளவு விசாரனைக்களுக்கு பின்பும்..

வண்டியில் வேகமாக வந்து கொண்டு இருந்தவனின் சிந்தனையை கலைத்தது ரோடு ஒரமாக நின்று கொண்டு லிஃப்ட் என்று கேட்டவனின் செயல்..இந்த நள்ளிரவில்..அதுவும் இந்த இடத்தில் யார் அது என்று ஜீப்பை மெதுவாக அவன் அருகே செலுத்திய பொழுது ஜீப்பின் வெளிச்சத்தில் அவன் 'ரத்தம்' வடியும் முகத்தை கவனித்தான்..அந்த முகம்..அந்த முகம்..இதற்கு முன்பு அவனுக்கு நன்கு பழக்கப்பட்ட முகம் ..ஜீப்பை அவன் அருகில் சென்று நிறுத்தினான்..

(ஒவ்வொரு கதைக்கும் ஒவ்வொரு நாயகன் இருக்ககூடும்..ஆனால் நாயகனை தீர்மானிப்பது கதை இல்லை..எவன் ஒருவன் சிந்தனையில் இருந்து அந்த கதை உருவகிறதோ அவனே அந்த கதையின் நாயகன்)

கதை 3 :

நெருக்கடி மிக்க அந்த தெருவின் உள்ள "ஆதர்ஷ் மந்திர்" என்ற பிரபலமான பள்ளியின் மாடியில் நின்று கொண்டு இருந்தனர் சரவணனும் கனகவேலும்..

"டேய் இந்த இடத்தை எதுக்கு முடிவு பண்ண..எனக்கு இன்னமோ எங்கயோ தப்பு பண்ணுரமோன்னு தோனுது.."..வேலு.

"இல்லை வேலு இந்த இடம் தான் சரியா வரும்..அவனை பல நாளா ஃபாலோ பண்ணதால சொல்லுறேன்.."..சரவணன்.

"நம்ம ரெண்டு பேரு பசங்களும் இங்க தான் படிக்கிறங்க அது நியபகம் இருக்குல..பார்த்துட்டங்கனா ரொம்ப கஷ்டம். சொல்லி புரிய வைக்கவும் முடியாது"..வேலு.

"ம்ம்..அது கூடவா மறந்து இருப்பேன்..ஆனா இந்த இடத்தை விட்டா அவனை அடிக்கிறது ரொம்ப கஷ்டம்..அதான்..".சரவணன்.

"வாட்ச்மேனை கரெக்ட் பண்ணி இங்க வந்துட்டோம்..ஆனா எனக்கு இன்னமோ ரொம்ப சந்தேகமா இருக்கு அவன் மேல.."..வேலு.

"எல்லாத்துலயும் சந்தேகம் தான் உனக்கு..போலிஸா போக வேண்டியவன்டா நீ.." என்று சொல்லிக்கொண்டே கிழே அந்த பள்ளியின் மைதனத்தை நோக்கினான் சரவணன்.

அங்கே கூட்டம்மாய் நின்று கொண்டு இருந்த மாணவர்களுக்கு மத்தியில்..அவனிடம் சற்று நேரத்திற்கு முன்பு காசு வாங்கி சென்ற வாட்ச்மேன் 'ரத்த' வெள்ளதில் துடித்துகொண்டு இருந்தான்.

(ஒருவன் விளக்கும் காட்சிகள் யாவும் மெய் என்று சொல்லமுடியாது..ஏன் என்றால் கண்ணால் கானும் காட்சியே பொய்த்து போக கூடிய வாய்ப்புகள் இருக்கின்றது)

டிஸ்கி : மிக முக்கியமா மூன்று கதையும் ஒரே கதை தான்.

தொடரும் ..

36 comments:

பிரியமுடன்...வசந்த் said...

சபாஷ் வினோத்..

வித்யாசமான கோணத்தில் கதை செல்கிறது...

நான் லீனியர் ஸ்டோரி மாதிரி இருக்குப்பா..

இதைத்தான் கேட்டேன் போன பதிவில கதை எங்கன்னு?

என் பக்கம் said...

//டிஸ்கி : மிக முக்கியமா மூன்று கதையும் ஒரே கதை தான்.//

அப்படியா?


நான் இப்போ துபாய்ல தான் இருக்கேன்.

நன்றி

சூரியன் said...

நடத்துங்க..

ஆ.ஞானசேகரன் said...

ம்ம்ம் நல்லாருக்கு ஆகட்டும்.. நண்பா

கலையரசன் said...

என்னனனனாது தொடருமமமமமா ?ரைட்டு முடிவு பண்ணிட்ட... இனி நான் என்னத்த சொல்ல???

அடுத்த பார்ட் எப்ப சார் வரும்.... ஆவலோட காத்திருக்கிறேன்!!

கோபிநாத் said...

மச்சி நல்லாயிருக்கு டா ;))

ஆனா டிஸ்கி தான் குழப்புது!

அது ஒரு கனாக் காலம் said...

குழப்புது

விக்னேஷ்வரி said...

என்ன இது. நல்ல ஓட்டமுள்ள கதையில் கரு புரியல. ஒரு வேளை நான் இன்னும் வளரலையோ...

☀நான் ஆதவன்☀ said...

ங்கொய்யால....நல்லாயிருப்பா. நல்லாயிரு

☀நான் ஆதவன்☀ said...

//
அடுத்த பார்ட் எப்ப சார் வரும்.... ஆவலோட காத்திருக்கிறேன்!!//

சிரிக்காம எப்படிப்பா உன்னால இப்படி சொல்ல முடியுது?

pappu said...

என்ன, கதை நல்லாருக்கே?

யேய்.....யாரடா அது எங்கண்ணே ப்ளாக்க மிஸ்யூஸ் பண்ணது. வினோத் அண்ணே, உங்க ப்ளாக்கல எவனோ ஒருத்தன் கதை போட்டிருக்கான். என்னன்னு கேளு.

பா.ராஜாராம் said...

அபரிதமான டேலன்ட் இருக்கு வினோ.வளர்த்து கொள்ளுங்கள்.

வினோத்கெளதம் said...

@ பிரியமுடன்...வசந்த்..

//நான் லீனியர் ஸ்டோரி மாதிரி இருக்குப்பா..//

அப்படியும் சொல்லலாம் வசந்த்..கதை புரிந்துகொண்டதற்கு நன்றிகள் பல..

@ என் பக்கம்

//நான் இப்போ துபாய்ல தான் இருக்கேன்.//

பிரதீப் ரொம்ப சந்தோசம் கால் பண்ணுறேன்..

@ சூரியன்..

நடத்துறேன் நடத்துறேன்..:)

வினோத்கெளதம் said...

@ ஆ.ஞானசேகரன் ..

நன்றிங்க..:)


@ கலையரசன் ..

//என்னனனனாது தொடருமமமமமா ?ரைட்டு முடிவு பண்ணிட்ட... இனி நான் என்னத்த சொல்ல???//

ஒரு தொடரும் போடா விட மாட்டிங்களே..:)

//அடுத்த பார்ட் எப்ப சார் வரும்.... ஆவலோட காத்திருக்கிறேன்!!//

இதுக்கு சூர்யா சொல்லி இருக்கிற பதில் தான் நானும் சொல்லுறேன்..:)

@ கோபிநாத்..

//ஆனா டிஸ்கி தான் குழப்புது!//

மச்சி கொஞ்சம் விஸ்கி அடிச்சிட்டு டிஸ்கிய படி புரியும்..:)

வினோத்கெளதம் said...

@ அது ஒரு கனாக் காலம் ..

//குழப்புது//

அடுத்த தடவை புரியுற மாதிரி எழுதுறேன் சார்..:)

@ விக்னேஷ்வரி ..

//நல்ல ஓட்டமுள்ள கதையில் கரு புரியல.//

இல்லை விக்கி..நான் புரியுற மாதிரி எழுதலைன்னு நினைக்கிறேன்..அடுத்த தடவை கொஞ்சம் தெளிவா எழுதுறேன்..பாருங்க யாரோ கதையை படிச்சிட்டு கடுப்பு ஆகி மைனஸ் வோட்டு வேற போட்டுட்டு போயிருக்காங்க..

@ ☀நான் ஆதவன்☀ ..

//ங்கொய்யால....நல்லாயிருப்பா. நல்லாயிரு//

ங்கொய்யால ஒரு கதை எழுதுனா கட்டில் முதற்கொண்டு தூக்கிட்டு ஓடிரங்கடா..:)

வினோத்கெளதம் said...

@ Pappu..

உனக்கு இருக்குடி பட்டாசு..:)

@ பா.ராஜாராம் ..

கண்டிப்பாங்க பாராட்டுக்கு நன்றி..:)

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

மூன்று கதையும் ஒரே கதைதான்.
நான் அப்போவே நினைத்தேன்.
கதையை 25% சுருக்கினால் எப்படி இருக்கும்? இன்னும் நன்றாக இருக்குமோ?கலையை கேளு, சொல்லுவான். வழமையான அருமை
ஓட்டுக்கள் போட்டாச்சு குரு.

KISHORE said...

நல்லா இருக்குடா சீக்கிரம் அடுத்த பாகம் எதிர்பார்கிறேன் ..

ஹாலிவுட் பாலா said...

/////(ஒவ்வொரு கதைக்கும் ஒவ்வொரு நாயகன் இருக்ககூடும்..ஆனால் நாயகனை தீர்மானிப்பது கதை இல்லை..எவன் ஒருவன் சிந்தனையில் இருந்து அந்த கதை உருவகிறதோ அவனே அந்த கதையின் நாயகன்)/////

ரைட்டு..!! இனிமே... ரவுடியை ஏன்டா கதாநாயகனா காட்டுறீங்கன்னு ஒரு பய கேட்க முடியாது! :)

யோசிக்க வைத்த வரிகள்..!

வெய்ட்டிங்..!

ஹாலிவுட் பாலா said...

ஸாரி.. நேத்து படிக்க முடியலை.

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

வினோத்.. நான் - லீனியர் கிங் ஆகிட்டு இருக்கப்பா.. கலக்கல்.. :)

thenammailakshmanan said...

ஆல்ப்ரெட் ஹிட்ச்சாக் ஏதாச்சும் கதை கேட்டு இருகாரா வினோத்
ஒரே ரத்தமா இருக்கு

வினோத்கெளதம் said...

@ கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்..

//கதையை 25% சுருக்கினால் எப்படி இருக்கும்? இன்னும் நன்றாக இருக்குமோ?//

நான் நினைத்தேன் கொஞ்சம் பெருசா இருக்கோன்னு..குறைத்து விடுகிறேன் குரு அடுத்த பாகங்களில்..;)

@ KISHORE

//நல்லா இருக்குடா சீக்கிரம் அடுத்த பாகம் எதிர்பார்கிறேன் ..//

கண்டிப்பா மச்சான் நேரம் கிடைக்கும்பொழுது எழுதி விடுகிறேன்..நன்றி..

@ ஹாலிவுட் பாலா ..

//யோசிக்க வைத்த வரிகள்..!//

நான் வாயில வந்ததை உளறி வச்சி இருக்கேன்..நீங்க அதை எல்லாம் கணக்குலேயே எடுத்துக்காதிங்க..':)

//ஸாரி.. நேத்து படிக்க முடியலை.//

தல என்ன இது..நீங்க வந்தாலே போதும் நேரம் கிடைக்கும்பொழுது..

வினோத்கெளதம் said...

@ ச.செந்தில்வேலன்..

//நான் - லீனியர் கிங்/

நன்றி செந்தில்..ஆனா அப்படி எல்லாம் இல்லை சாதாரணமா தான் எழுதுறேன்..:)

@ thenammailakshmanan..

//ஒரே ரத்தமா இருக்கு//

அது தானா வந்து இருச்சுங்க..:)

நேசமித்ரன் said...

நல்ல ஓட்டமுள்ள கதை

வினோத்கெளதம் said...

@ நேசமித்ரன் ..

நன்றி தல..:)

நாகா said...

நெஜமாவே புரியலீங்க, அதுனாலதான் புரிஞ்சுதுன்னு சொன்னவங்க யாராவது விளக்குவாங்களோன்னு பின்னூட்டம் போடாம வெயிட் பண்ணி, சூப்பர்னு போடலாம்னு நெனச்சேன். தயவு செஞ்சு நீங்களே எனக்கு விளக்கமா ஒரு மெயில் அடிச்சுருங்க..

வினோத்கெளதம் said...

நாகா இது ஒரே பதிவில் மூன்று தொடர்கதை என்ற கோணத்தில் படியுங்கள்..
அப்புறம் இனி வரும் பாகங்களையும் படிக்கவும்..(இந்த கொடுமை வேறயா நீங்க நினைத்தாலும் வேறு வழி இல்லை.. :) )

நாகா said...

நீங்க இடுகை போட்ட முதல் நாளே படிச்சதால டிஸ்கிய சரியா கவனிக்கல. ஃப்ளோ நல்லாருக்கு, தொடர்ந்து படிச்சுட்டா போச்சு

வினோத்கெளதம் said...

கண்டிப்பா வாங்க நாகா..நன்றி...

Muniappan Pakkangal said...

Will the story be continued ? Very interesting Vinoth Gowtham.

வினோத்கெளதம் said...

Thanks for coming sir..Ya it will be continued.

ஹாலிவுட் பாலா said...

போன திங்கள் கிழமையே.. புலம்பலை (அல்லது இனியலை). இன்னொரு திங்களே வந்துடுச்சி.

அப்புறம்.. இந்தக் கதையையும் அப்படியே டீல்ல விட்டுட்டீங்களே...! :(

வினோத்கெளதம் said...

தல எழுதனும்..எழுதிடுறேன்..:)

thenammailakshmanan said...

பதினாலு நாளா எழுதாம இருக்கீங்களே வினோத்

ஏதாவது வெளி ஊர் பயணத்தில் இருக்கீங்களா

வினோத்கெளதம் said...

எழுதனும்ங்க..கொஞ்சம் பணிச்சுமை அதிகம் ஆகிடுச்சு அதான்..கூடிய விரைவில் வந்துடுவேன்..:)