Thursday, October 22, 2009

அன்று ஒரு இரவில்..

சிவா தன் கையில் பிடித்து இருந்த லார்ஜ் வோட்காவை போதையில் சரிந்து இருந்த கண்களால் பார்த்துக்கொண்டு இருந்தான்..

மேலே சுழன்று கொண்டு இருந்த அலங்கார மின் விளக்குகள் அங்கே சுற்றி இருந்த மனிதர்களை இன்னும் பல வண்ணங்களில் காட்டியது.

துபாய்க்கு டெபுடேஷனில் வந்ததில் இருந்து சிவா தனியாக பார்ஃக்கு வருவது இதான் முதல் முறை.எப்பொழுதும் கம்பெனி கொடுக்கும் விஷ்ணு இந்த முறை விடுமுறைக்கு இந்தியாவில்.
முதல் வெளிநாட்டு பயணம்..தப்பு செய்ய அதிக சந்தர்ப்பம் இருந்தும் தடுத்த ஒரே விஷயம் காதல் மனைவி ஸ்வேதா.கல்யாணத்திற்கு பின்பு தான் அதிகம் காதலிக்க தொடங்கி இருந்தான்.

இங்கு வந்த எட்டு மாத காலங்களில் ஒரு நாள் கூட சிவாவோ இல்லை அவளோ ஃபோன் செய்யாமல் இருந்தது இல்லை..இப்பொழுது தான் புதுசாக ஒரு MNC கம்பெனியில் சேர்ந்து இருக்கிறாள் என்று ஸ்வேதாவின் நினைவுகளை மேலும் வார்த்தைப்படுத்த முடியாமல் கலைத்தது சிவாவின் எதிரே சற்று நேரத்திற்கு முன் வந்து அமர்ந்த ஒரு இளமங்கையின் செயல்.

சிவாவை நோக்கி தான் எதோ சைகை செய்தாள்..

"if u don mind, Can u buy some drink for me "..அவள்.


"ya..Sure "..சிவா.

அவன் நிலை தடுமாறி அவனை அறியாமல் வாயில் இருந்து வந்து விழுந்தன வார்த்தைகள்..

ரஷிய பெண் சாயல்..பார்த்தவுடன் கிறங்கடிக்கும் அழகு..கண்டிப்பாக carl girlஆக தான் இருக்க வேண்டும்..ஏன் என்றால் அவர்கள் தான் பேச்சை இதே மாதிரி ஆரம்பிப்பார்கள் என்று நினைத்து கொண்டு இருந்த பொழுதே அதை உறுதிப்படுத்தும் விதமாக..


"Do u need a company for this Night"..என்று சிவா வாங்கி தந்த வோட்காவை பருகியப்படியே கேட்டாள்..

அது வரை அவனுக்கு அந்த எண்ணம் இல்லாவிட்டாலும் ஒரு சின்ன சபலம் தட்டியது..
விஷ்ணு உடன் இல்லாமல் ஃபிளாட்டில் அவன் மட்டும் தனியாக இருந்ததை எண்ணிய பொழுது ஆசை-சபலம் பல மடங்கு கூடி இருந்தது..

மறுபடியும் காதில் வந்து விழுந்தன அந்த வார்த்தைகள்..


"Do u need a company for this Night"..

"yaa..Wait"..சிவா.

உள்மனம்.."டேய்..ஸ்வேதா, காதல், கலாச்சாரம்" என்று பல குறிச்சொற்களை அலறிக்கொண்டு இருந்தது..இருந்தாலும் "டேய்..ச்சீ..காமத்தில் என்னா இருக்கு..நீயும் ஆசைய மறைக்க கலாச்சாரம்னு முகமூடிய போட்டுக்க பார்கிறியா என்ன.. வெட்க்கபடாம இழுத்துட்டு போ" என்று சிவாவுக்கு உள்ளே இருந்த தத்துவ ஞானி ஃபுல் போதையில் உளறிக்கொண்டு இருந்தான்..

எதோ தப்பு பண்ண போறோம்னு அவன் உள்மனம் நினைத்துக்கொண்டு இருந்தப்பொழுதே மொபைல் அலறியது..

"ஸ்வேதா காலிங்.."

என்ன ஆச்சு மணி நைட்டு 12 ஆகுது..இந்தியாவில் 1:30 ..இந்த சமயத்தில் என்று நினைத்துக்கொண்டே ரஷியாக்காரியிடம் "ஒரு நிமிஷமுன்னு" சைகை மட்டும் காட்டிவிட்டு வெளியே வந்தான்..

"யே என்ன ஆச்சு..இந்த சமயத்தில் Anything serious"..சிவா.

"இல்லை..அது எல்லாம் ஒன்ணும் இல்லை..தூக்கம் வரல அதான் பண்ணேன்.."..ஸ்வேதா.

"ஏன்..என்ன ஆச்சு.."

"நீ எப்படா வருவா..ஊருக்கு.."..ஸ்வேதா.

"அதான் தெரியும்ல..இன்னும் நாலு மாசம் பொறுத்துக்கோ..ஓடியந்த்ருவேன்..இன்னும் நீ விஷயத்தை சொல்லலை.."..

"இல்லை சிவா..அதான் சொல்லி இருக்கேன்ல என் டீம்ல வேலை செய்யுற பார்த்தி.."

"ஆமாம் அவனுக்கு என்ன உடம்பு எதாச்சும் சரி இல்லையா..அதான் இவளோ நேரம் அந்த வருத்தத்துல தூக்கம் வரலையா உனக்கு.."..சிவா.

"யே..ஓத வாங்குவ..அது எல்லாம் ஒன்ணும் இல்லை.."..ஸ்வேதா.

''ம்ம்..பின்ன''..

"இல்லை..நல்லா தான் பேசிக்கிட்டு இருப்பான்..திடிர்னு இன்னிக்கு சினிமாக்கு போலாமான்னு கேக்குறான்..கண்டிப்பா அவன் பார்வை வேற அர்த்தம் சொன்னுச்சு "..ஸ்வேதா.

"......".. சிவா..

''ரொம்ப பயமா இருக்கு..அவன் கேட்டதால சொல்லல..எதோ ஒரு தெளிவு இல்லாம இருக்கு..நான் எதையோ சமிபமா ரொம்ப மிஸ் பண்ணுறேன்..கண்டிப்பா அது நீ தான்.. இதுக்கு மேல எப்படி சொல்றதுன்னு தெரியுல..வேலையே விட்டுடலாம்னு பாக்குறேன்.."

"யே..நீ தான் போர் அடிக்குது வேலைக்கு போறேன்னு சொன்ன..அதனால தான் நான் ஓகே சொன்னேன் ஸ்வெத்..மத்தப்படி அது உன் இஷ்டம் தான்..ஆனா ஒன்னு உன் மேல எனக்கு உன்னை விட நிறையா நம்பிக்கை இருக்கு..சோ..எதை பத்தியும் அலட்டிக்காம தூங்கு.."

"ம்ம்..முடிஞ்சவரைக்கும் ஊருக்கு சீக்கிரம் வர பாருடா.."..ஸ்வேதா.

"கண்டிப்பா..குட் நைட்"..சிவா.

''குட் நைட்"..ஸ்வேதா.

போதை தெளிந்தது போல் இருந்தது..எதையோ மறந்தவனாக பார் உள்ளே போனான்..க்ளாசில் இன்னும் இரண்டு சிப் வோட்கா பாக்கி இருந்தது அதை மட்டும் அடித்து விட்டு சுற்றி முற்றி பார்க்காமல் காதில் விழுந்த வார்த்தைகளை வாங்காமல் சிவா ஃ பிளாட்டை நோக்கி நடையை கட்டினான்.

32 comments:

தீப்பெட்டி said...

நல்லாயிருக்கு வினோத்..

இன்னும் கூட சுவாரஸ்யம் கூட்டியிருக்கலாம்..

கார்ல்ஸ்பெர்க் said...

//எப்பொழுதும் கம்பெனி கொடுக்கும் விஷ்ணு இந்த முறை விடுமுறைக்கு இந்தியாவில்//

- ஓஹோ, இது நீங்க சமீபத்துல இந்தியா போனீங்களே, அப்ப நடந்த கதையா?? :)

Prabhu said...

எப்பொழுதும் கம்பெனி கொடுக்கும் விஷ்ணு இந்த முறை விடுமுறைக்கு இந்தியாவில்.////

எப்பவும் விஷ்ணு கம்பெனி கொடுப்பானா? ச்சீய்...

Prabhu said...

இப்படி ஜிம்பிளா முடிச்சிட்டீங்களே!

kishore said...

நல்லா இருக்கு மச்சி.. சொல்வது போல இன்னும் கொஞ்சம் சுவாரசியம் கூட்டி இருக்கலாம்

வினோத் கெளதம் said...

@ தீப்பெட்டி..

நன்றி கணேஷ்..சுவாரசியம் கூட்டி இருக்கலாம் தான் சட்டியில் இருந்தால் தானே ஆப்பையில் வரும்.:))

@ கார்ல்ஸ்பெர்க்..

ஏங்க அது நான் இல்லைங்க..:)

@ Pappu..

//எப்பவும் விஷ்ணு கம்பெனி கொடுப்பானா? ச்சீய்...//

அடேய்..நான் சொன்னது வேற கம்பெனி..
ஆமாம் மேல தான் 15+நு போட்டு இருக்கேனே உனக்கு என்ன இங்க வேலை..:))


//இப்படி ஜிம்பிளா முடிச்சிட்டீங்களே!//

நீ "எந்த" மாதிரி எதிரப்பர்கிறேனு எனக்கு தெரியும்டி..

kishore said...

//pappu said...


எப்பவும் விஷ்ணு கம்பெனி கொடுப்பானா? ச்சீய்...//

எதை சொன்னாலும் அதுல இருந்து லீட் எடுகுறாங்கப்பா ..

மணிஜி said...

டிபிக்கல் குமுதம் கதை..அனுப்புங்க..இல்லைன்னா விகடன்,குங்குமம்..நல்லா இருக்கு வினோ.வாழ்த்துக்கள்

கார்த்திகைப் பாண்டியன் said...

நடுவில் நானும் சிவாவும் மாறி மாறி வருதேப்பா.. எதேச்சையா இல்லை காரணமா அப்படி எழுதி இருக்கீங்களா..

வினோத் கெளதம் said...

@ தண்டோரா..

//டிபிக்கல் குமுதம் கதை..அனுப்புங்க..இல்லைன்னா விகடன்,குங்குமம்..நல்லா இருக்கு வினோ.வாழ்த்துக்கள்//

தல எதாச்சும் காமெடி பண்ணுரிங்கள..
இருந்தாலும் நன்றி..:))

@ கார்த்திகைப் பாண்டியன்..

இல்லை கார்த்தி எனக்கும் அதே Confusion இருந்துச்சு..சரி உணர்வுகளை சொல்லும்பொழுது நாம சொல்லுற மாதிரி சொன்னா..நல்லா இருக்கும்னு தோனுச்சு..இருந்தாலும் Characters Intro பண்ணிட்டு..அதுக்கப்புறம் அவங்க முலமா கதை சொல்கிற பாணி இன்னும் எனக்கு வரல..எப்பொழுதும் டயலாக் சொல்லிடு பக்கத்துல யாரு சொன்னகனு அவங்க பேர போடுவேன். இதுல ரெண்டுத்தையும் ட்ரை பண்ணேன்..

கார்ல்ஸ்பெர்க் said...

சொல்ல மறந்துட்டேன்.. நம்ம கடைய மூடி ரெண்டு மாசம் கழிச்சு கூட வந்து பார்த்திருக்கீங்க.. ரெம்ப நன்றி.. :)

ஷண்முகப்ரியன் said...

விதைகள் இருக்கின்றன.அவை மரமாக வள்ர இன்னும் நிறைய வோட்கா ஊற்ற வேண்டும்,வினோத்!

பூத்துக் குலுங்க எனது வாழ்த்துகள்.

வினோத் கெளதம் said...

@ Kishore..

நன்றி மச்சி..அடுத்த தடவை முயற்சி பண்ணுறேன்..


@ கார்ல்ஸ்பெர்க்..

//சொல்ல மறந்துட்டேன்.. நம்ம கடைய மூடி ரெண்டு மாசம் கழிச்சு கூட வந்து பார்த்திருக்கீங்க.. //

ஆனா நீங்க சொல்லி இருந்த விஷயம் ரொம்ப டச்சிங்கா இருந்துச்சு..நானும் கிட்டதட்ட அதேப்போல் அனுபவப்பட்டு உள்ளேன்..
ஆமாம் கடையை ஏன் மூடுனிங்க..!!


@ ஷண்முகப்ரியன்..

//விதைகள் இருக்கின்றன.அவை மரமாக வள்ர இன்னும் நிறைய வோட்கா ஊற்ற வேண்டும்,வினோத்!
பூத்துக் குலுங்க எனது வாழ்த்துகள்.//

கண்டிப்பா சார்..தங்களின் ஆசிர்வாத்தோடு மேலும் வளர்த்துக்கொள்ள முயற்சிக்கிறேன்..:)

கார்ல்ஸ்பெர்க் said...

வேல ரெம்ப ஜாஸ்தி ஆயிடுச்சு.. அதான் தற்காலிகமா ஷட்டர் போட்ருக்கேன்.. கூடிய சீக்கிரமே திறக்கனும், பார்க்கலாம்..

Comment எழுதுறதுக்கு 2 minutes தான் ஆகுது.. ஆனா, பதிவா எழுதுறதுன்னா ஒரு ரெண்டு மணி நேரமாவது ஆயிடுது..

பாலா said...

////Comment எழுதுறதுக்கு 2 minutes தான் ஆகுது.. ஆனா, பதிவா எழுதுறதுன்னா ஒரு ரெண்டு மணி நேரமாவது ஆயிடுது..////

ரெண்டு மணி நேரத்தில் பதிவு எழுதறது எப்படின்னு சொல்லிக் கொடுங்க தல.

=======

தண்டோரா & ஷண்முகப்ரியன் சார் சொன்னதை நானும் வழி மொழிகிறேன்!!

வினோத்.. கதை யாருடைய பார்வையில் இருந்து சொல்லப் படுதுன்னு.. தெளிவா இல்லை.

3rd person - 1st person-ன்னு மாறி மாறி வருது. அதை கொஞ்சம் எடிட் பண்ணிடுறீங்களா.. ப்ளீஸ்!

வினோத் கெளதம் said...

நன்றி தல.. சிவாவோட பார்வையிலேயே மாத்திட்டேன்..:)

வினோத் கெளதம் said...

ஆமாம் இது 3rd person view தானே எப்படி சிவாவோட பார்வையில்னு வரும் !!...எதோ ஒன்னு மாத்திட்டேன்..:)

ers said...

நண்பர்கள் கவனத்திற்கு

Tamil

Web Submit

(coming soon) - Auto Submit

Tamil News Submit

English

Top Blogs

Cinema

Cine Gallery

geethappriyan said...

ரொம்பவே ரசித்தேன் வினோத்,
நிஜத்திலும் ஒருவன் இப்படியே மனைவிக்கு துரோகம் செய்யக்கூடாது என்னை மாதிரி,
ஹி ஹி

யாரும் என்னை ராமன்னு சொல்லலை.
அதான் நானே சொல்லிக்கிறேன்.

நல்ல ஸ்டைலான நடை.

இங்க உள்ள டான்ஸ் பார்,டிஸ்கோ பார் எல்லாம் போயிருக்கீங்களா?

ஓட்டுக்கள் போட்டாச்சு.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

நல்ல கதை வினோத். ஆரம்பம் முதல் இறுதி வரை இதமாகச் செல்கிறது.

வரதராஜலு .பூ said...

நன்றாக உள்ளது

ப்ரியமுடன் வசந்த் said...

நல்ல விஷயம்...

நல்லா இருக்கு வினு...

ஆ.ஞானசேகரன் said...

சுவாரிசியமாக இருக்கு நண்பரே

கார்ல்ஸ்பெர்க் said...

//ஹாலிவுட் பாலா said...
////Comment எழுதுறதுக்கு 2 minutes தான் ஆகுது.. ஆனா, பதிவா எழுதுறதுன்னா ஒரு ரெண்டு மணி நேரமாவது ஆயிடுது..////

ரெண்டு மணி நேரத்தில் பதிவு எழுதறது எப்படின்னு சொல்லிக் கொடுங்க தல.//

- 2 Mins'க்கு ரைமிங்கா இருக்கட்டுமேன்னு ரெண்டு மணி நேரம்ன்னு சொன்னேன்.. ஆனா அதுக்கு நான் எப்படியும் ரெண்டு வாரமாவது யோசிச்சிருப்பேன் :)

வால்பையன் said...

நல்லார் ”இருவர்” உளரேல் அவர் பொருட்டு
எல்லோருக்கும் பெய்யும் மழை!

வினோத் கெளதம் said...

@ கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.

நன்றி குருவே தங்கள் பாராட்டுக்கு..

//யாரும் என்னை ராமன்னு சொல்லலை.
அதான் நானே சொல்லிக்கிறேன்.//

குரு நான் சொல்றேன் நீ ஏக பத்தினி விரதன்.:)

//இங்க உள்ள டான்ஸ் பார்,டிஸ்கோ பார் எல்லாம் போயிருக்கீங்களா?//

துபாயில் சென்றது இல்லை..அல்-அய்ன்ல ரெண்டொரு முறை சென்று உள்ளேன்..

@ ச.செந்தில்வேலன்..

நன்றி தல..:)

நன்றி Varadaradjalou :)

நன்றி வசந்த் :)

@ ஆ.ஞானசேகரன்..

நன்றிங்க..

வினோத் கெளதம் said...

@ கார்ல்ஸ்பெர்க்..

சீக்கிரம் கடைய திறங்க..:)

வினோத் கெளதம் said...

@ வால்ஸ்..

வால்ஸ் எதோ சொல்ல வரிங்க..ஆனா என்னனு தான் இந்த மரமண்டைக்கு புரியுல..:)

Muniappan Pakkangal said...

Nice story Vinoth.Everyone is prone for wrongpath unless something stops them.

வினோத் கெளதம் said...

@ Muniappan Pakkangal..

Yes sir absolutely u r rite..
Thanks for coming.

☀நான் ஆதவன்☀ said...

கதை நல்லாயிருக்கு வினோத். ஆனால் முடிவு எதிர்பார்த்தது தான்

ஊருக்கு போயிட்டு வந்ததிலேருந்து ஒரு மார்க்கமா தான் இருக்க :)

வினோத் கெளதம் said...

நன்றி சூர்யா..
யோவ் நான் ஊர்க்கு போறதுக்கு முன்னையே இது பத்தி எழுதுன கதை..Draftல இருந்துச்சு..