Monday, October 5, 2009

வெயில்..


sun-rays-coming-out-of-the-cloudfs-.jpg image by salviaforme

வெயிலோடு உறவாடி வெயிலோடு விளையாடி வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே..என்ற பாடல வரிகள் தான் நியாபகத்தில் வருகின்றது..

எனக்கு நியாபகம் தெரிந்து சூரியனில் இருந்து வெளிப்படும் கதிர்களின் வெப்பத்தை, அந்த வெயிலை சிறுவனாக இருந்தப்பொழுது முதன்முறையாக அனுபவித்தது மார்கழி மாத குளிரில் என் அப்பாவின் பின்னால் மிதிவண்டியில் திரும்பி அமர்ந்துக்கொண்டு அந்த வெயில் என் மேல் முழுவதும் படும்ப்படி பயணிப்பேன்..குளிரையும் போக்கி என் உடம்பில் உற்சாகம் ஊட்டியது உன் வெப்பம்..

கையில் பூதகண்ணடியை வைத்து கொண்டு அதன் கிழே ஒரு காகிததையும் வைத்து உன்னை(சூரியனை) நெற்றியில் கை வைத்து மறைத்தப்படி வெகுநேரம் உற்று நோக்கி கொண்டு இருப்பேன் காகிதம் பொசுங்கும் வரை..உன் ஆற்றல் கண்டு வியந்து இருக்கிறேன்..

நண்பர்களோடு குளத்தில் குளித்து விட்டு ஆற்றில் ஓரத்தில் இருக்கும் மணலில் உருண்டு பிரண்டு படுத்து இருப்போம் அப்பொழுது உன் வெப்பத்திற்கு உடம்பு ஏங்கும்..

என் தம்பி பிறந்தப்பொழுது என் அம்மா அவனை குளிப்பாட்டியப்பின் அவனை துடைத்து விட்டு நான் அவனை கையில் ஏந்த கேக்கும்ப்பொழுது.."கொஞ்சம் நேரம் இருடா" என்று சொல்லிவிட்டு அவனை உன் வெப்பத்தில் காட்டியப்பொழுது..உன் ஒளி அவன் மீது பரவி அவனை இன்னும் பிரகாசமாக காட்டியது கூட நியாபகத்தில் உள்ளது..

ஒரு நல்ல மழைக்காலத்தில் கொடைக்கானலில் காலையில் அடித்த சிறிய சாரலில் உன் கதிர்கள் வானவிலின் ஊடே வந்து அந்த ஊரை அந்த நேரத்தில் பல வண்ணங்களில் காட்டிய காட்சி இன்றும் நினைக்கையில் எனக்கு ஒரு சிலிர்ப்பு ஏற்படும்..அந்த கணங்களில் உன்னை முழுமையாக நேசித்தேன்..


பேருந்தில் செல்கையில் மரங்கள் படர்ந்து இருக்கும் சாலையில் மரங்களின் ஊடே மறைந்து மறைந்து வரும் உன் வீச்சினை வெகு நாட்கள் ரசித்து இருக்கிறேன்..

கொளுத்தும் வெயிலில் நண்பர்களோடு கிரிக்கெட் விளையாடும் பொழுதும்,

வீட்டில் இழுத்து போர்த்திக்கொண்டு படுத்து இருக்கும் நேரத்தில் நீ ஜன்னல் வழியாக எட்டிப்பார்க்கும் பொழுது,

சென்னை மாநகரத்தில் அடிக்கும் வெயிலில் வேலை தேடி அலைந்தப்பொழுதும்,

இந்த பாலைவன தேசத்தில் நுழைந்தப்பின் ஏனோ என்னை அறியாமல் உன்னை கொஞ்சம் கொஞ்சமாக வெறுக்க தொடங்கினேன் வெயிலே..

பிரிவின் துயரத்தால் என் கண்களில் இருந்து வழிய தொடங்கும் முதல் சொட்டு கண்ணீரை கூட உன் உக்கிரத்தால் தன்வசம் இழுத்துக்கொள்ளும் உன் சூடு இப்பொழுது எல்லாம் என் மேலே பட்டாலே அருவெறுப்பாக இருக்கின்றது..

என் நாட்டில் நான் உன் முலம் உணர்ந்த உணர்வுகள் இன்று எனக்கு இங்கு வேறு ஒரு விதமாக..

அதற்கு சாட்சி நீ என் அறையில் பாய்ச்சும் வெளிச்சம் பிடிக்காமல் நான் இன்று அடித்து சாத்திய ஜன்னல்கள்..


47 comments:

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

இருந்தாலும் எல்லோரும் இங்கு வெயிலை வெறுக்கத்தான் செய்கிறோம்.
இன்னும் ஒரு மாதம் பொறுங்க பாஸு,
சிலுசிலுவென குளிரடிக்குதுன்னு பாடுவீங்க.
இங்கயும் காலைல முகத்தில் வெய்யில் அடித்து எழுப்பும்,ஆனால் கண்ணடி சன்னல் சாத்தியும் பயணில்லை.கவிதையா முடிச்சீங்க

KISHORE said...

அருமை அட்டகாசம் உங்களால மட்டும் எப்படிங்க இப்படி எழுத முடியுது?
(இப்போ உங்களுக்கு உங்க மனசாட்சி பேசுறது கேக்கும்னு நெனைக்கிறேன் )

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

ஃபார்மாலிட்டி பண்ணியாச்சு;))))))))))))

மின்னுது மின்னல் said...

அருமை அட்டகாசம் உங்களால மட்டும் எப்படிங்க இப்படி எழுத முடியுது?
//

ரீப்பீட்டேய்ய்

:)

KISHORE said...

really intense thinking vinoth.. keep it up..

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

வினோத் அழகா எழுதியிருக்கீங்க.

வெயில், காற்று, தண்ணிர் என இயற்கை ஊருக்கு ஊர் வேற மாதிரி தான் இருக்கிறது.

sarathy said...

எனக்கும் தான் வினோத்...

நல்லாயிருக்கு...

SUREஷ் (பழனியிலிருந்து) said...

நன்றாக இருக்கிறது

SUREஷ் (பழனியிலிருந்து) said...

ஓட்டுக்கள் போட்டாச்சு

Anonymous said...

pathivu eludha matter illainna ippdiya?

ஹாலிவுட் பாலா said...

யாருப்பா.. அது?? கிஷோரா.. அனானியா வந்து பின்னூட்டம் போட்டது????
===

ஆரம்பத்தில்.. துபாயிலுமா அக்டோபர் 2-ன்னு நினைச்சேன். போகப் போக பிக்கப் ஆய்டுச்சி!

ஆனாலும்.. நீங்க ரொம்ப உணர்ச்சி வசப்படுறீங்க! வீட்டுல சொல்லி கல்யாணத்தை பண்ணி வைக்கச் சொல்லனும்.

கோபிநாத் said...

;)))

pappu said...

எங்கிருந்து இதெல்லாம்! ஒரே ஃபீலிங்ஸா?

வினோத்கெளதம் said...

@ கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்..

//இன்னும் ஒரு மாதம் பொறுங்க பாஸு,
சிலுசிலுவென குளிரடிக்குதுன்னு பாடுவீங்க.//

ஆமாம் கார்த்தி..நான் போன வருடம் அனுபவித்து இருக்கிறேன்..
நன்றி.

@ Kishore..

அடேய் ..அட டேய்..

@ மின்னுது மின்னல் ..

நன்றிங்கோ..:)

@ KISHORE
//really intense thinking vinoth.. keep it up..//

ரைட்டு..நீ சொல்லிட்டல வச்சிக்கிறேன்.

@ ச.செந்தில்வேலன்..

நன்றி செந்தில்..ஆமாம் சொன்னதுப்போல் வேறுப்படும்..

@ Sarathy..

நன்றி சாரதி..அனுபவிச்சு தான் ஆகணும் நாம..

@ SUREஷ் (பழனியிலிருந்)..

நன்றி தல..:)

@ Anonymous..

// pathivu eludha matter illainna ippdiya?//

ஆமாம் அதே தான் கொஞ்சம் கற்பனை வறட்சி..
(இதில் தப்பாக எடுத்துக்கொள்ள ஒன்றும் இல்லை..இதை தாங்கள் பெயரிலே சொல்லி இருக்கலாம்..:)))

@ ஹாலிவுட் பாலா..

//யாருப்பா.. அது?? கிஷோரா.. அனானியா வந்து பின்னூட்டம் போட்டது????//

தல அவனா இருந்த கால் பண்ணியே திட்டுவான்..:)

//ஆரம்பத்தில்.. துபாயிலுமா அக்டோபர் 2-ன்னு நினைச்சேன். போகப் போக பிக்கப் ஆய்டுச்சி!//

நன்றி நன்றி நன்றிங்கோ...

//ஆனாலும்.. நீங்க ரொம்ப உணர்ச்சி வசப்படுறீங்க!//

யாரு நானா..தல இது சும்மா ஒரு இதுக்கு எழுதுனது..

//வீட்டுல சொல்லி கல்யாணத்தை பண்ணி வைக்கச் சொல்லனும்.//

யாரு வீட்டுல..:))

@ கோபிநாத் ..

நன்றி கோபி..

@ pappu..

//எங்கிருந்து இதெல்லாம்! ஒரே ஃபீலிங்ஸா?//

இன்னிமே நோ ஃபீலிங்க்ஸ் பதிவு சரியா..

பிரியமுடன்...வசந்த் said...

பார்டா சுட்டெரிக்குற வெயில்ல ஊருப்பக்கம் போயி சொகுசா இருந்துட்டுவந்துட்டு கிளைமேட் சேஞ் ஆகும்போது வெயில் பதிவா

அது நாங்க எழுதணும்டி..

ஜெகநாதன் said...

வெயிலைப் ​போன்ற பிரகாஷம்! நிழல் போன்ற அமைதி! ம்ம்ம் கலக்குங்கள்!

♠ ராஜு ♠ said...

ஒரே ஃபீலிங்ஸ் ஆஃப் இந்தியாவாவே இருக்கே தல..! என்னாச்சு..?

கலையரசன் said...

டேய்! நீ இன்னம் இந்தியாவுலேர்ந்து இங்க வரலையா?
வந்துத்தொலடா!!

இல்ல, வெயில் ஜாஸ்தியானதுனால.. ஏதாவது மெல்ட் ஆகிடுச்சா?

நாஞ்சில் பிரதாப் said...

//சென்னை மாநகரத்தில் அடிக்கும் வெயிலில் வேலை தேடி அலைந்தப்பொழுதும்,//

டாப்பு... கொசுவத்தியை சுத்த வச்சுட்டீங்களே தலைவா... எனக்கு அழுகையே வந்துடுச்சு...

கலையரசன் said...

அடுத்து என்னப்பா.. மழை, காற்று, தண்ணீர் ன்னு எழுதுவீயா?

*பான்டியில மழை பெய்யும்!
துபாயில பெய்யாது!!

*பான்டியில காத்து சில்லுன்னு அடிக்கும்!
துபாயில காத்து கொல்லுன்னு அடிக்கும்!!

*பான்டியில குடிதண்ணிய ஒசியில குடிப்பேன்!
துபாயில குடிதண்ணிய காசுகொடுத்து குடிப்பேன்!!

என்னங்கடா கலர்கலரா ஃபீலிங்ஸ்சு...?

வால்பையன் said...

அங்கே வெயிலும் அதிகம், குளிரும் அதிகம் இல்லையா!?

☀நான் ஆதவன்☀ said...

வினோத் இன்னும் ஒரு மாசம் போச்சுன்னா குளிருக்காகவும் இப்படி எழுத வேண்டியிருக்கும் பாருங்க :)

கே.ரவிஷங்கர் said...

பதிவு நல்லா இருக்கு.

Varadaradjalou .P said...

//பிரிவின் துயரத்தால் என் கண்களில் இருந்து வழிய தொடங்கும் முதல் சொட்டு கண்ணீரை கூட //

என்ன இன்னும் மனம் சமாதானம் ஆகவில்லையா விநோத்.

பதிவு சூப்பர்

Varadaradjalou .P said...

//ஆனாலும்.. நீங்க ரொம்ப உணர்ச்சி வசப்படுறீங்க! வீட்டுல சொல்லி கல்யாணத்தை பண்ணி வைக்கச் சொல்லனும்.//

அதான் அவரோட பீலிங்க போன பதிவுல சொல்லிட்டாரே. இன்னுமா அவங்க வீட்டுக்கு சேதி போவல?

கார்ல்ஸ்பெர்க் said...

நீங்க படிச்சது Coimbatore'லயா??

நாகா said...

Nice

KISHORE said...

//நீங்க படிச்சது Coimbatore'லயா??//

ஆமா ஆமா அப்படியே படிச்சிட்டாலும்..

ஷண்முகப்ரியன் said...

சுட்டெரிக்கும் வெயிலையும் கவித்துவமாகச் சொல்லி இருக்கிறீர்கள்,வினோத்.
பாராட்டுக்கள்.

பின்னோக்கி said...

//கையில் பூதகண்ணடியை வைத்து கொண்டு அதன் கிழே ஒரு காகிததையும்

மிகவும் ரசித்தேன். சில நேரங்களில் பேப்பருக்கு பதிலாக, புறக்கையையும் பதம் பார்த்தது வெயில்.

காலை 11 மணி, விடுமுறை நாள் வெயிலுக்கு தனி தன்மை இருக்கிறது.

வினோத்கெளதம் said...

@ பிரியமுடன்...வசந்த்..

ஆமாம் ஆமாம் ஊர்ல குளு குளுன்னு தான் இருந்துச்சு நான் போறப்ப மச்சி..

@ ஜெகநாதன்..

நன்றி ஜெகநாதன்..:)

@ ♠ ராஜு ♠ ..

//ஒரே ஃபீலிங்ஸ் ஆஃப் இந்தியாவாவே இருக்கே தல..!//

ராஜு நீயுமா..இப்படி கேக்குற...ரைட்டு விடு..:)

@ கலையரசன்..

கலை..நான் என்ன சொல்லுவேன்..நான் எழுதுனது வேற மாதிரி..
சரி..அதைப்பத்தி நான் ஏற்கனவே சொல்லிட்டேன் உன்கிட்ட..

வினோத்கெளதம் said...

@ நாஞ்சில் பிரதாப்..

//டாப்பு... கொசுவத்தியை சுத்த வச்சுட்டீங்களே தலைவா... எனக்கு அழுகையே வந்துடுச்சு..//

நன்றிங்க..

வாங்க ரெண்டு பெரும் ஒரு ரூம் போட்டு அழுவோம்..:))

@ கலையரசன்..

அடங்க மாடியா நீ..:))

@ வால்பையன்..

ஆமாம் வால்ஸ் எல்லாமே அதிகம் தான்..

@ ☀நான் ஆதவன்☀..

சூர்யா..இனிமே நான் எந்த பதிவு எழுதினாலும் அதுல துபாய் அப்படிங்கிற வார்த்தை கூட இருக்காது..:))

வினோத்கெளதம் said...

@ கே.ரவிஷங்கர்..

நன்றி தல..

@ Varadaradjalou .P ..

//என்ன இன்னும் மனம் சமாதானம் ஆகவில்லையா விநோத்.//

தல நான் இதை அந்த இல்லை..அர்த்தத்தில் எழுதவே இல்லை..
சாதரணமாக தான் எழுதினேன்..:)

//அதான் அவரோட பீலிங்க போன பதிவுல சொல்லிட்டாரே. இன்னுமா அவங்க வீட்டுக்கு சேதி போவல?//

நானே சொன்னா தான் உண்டு..:))

//பதிவு சூப்பர்//

நன்றி..:)

வினோத்கெளதம் said...

@ கார்ல்ஸ்பெர்க்..

//நீங்க படிச்சது Coimbatore'லயா??//

ன்னு எழுதுனாலே எனக்கு படிக்க தெரியாது தல..
ரெண்டு தடவை வந்து இருக்கேன் அவ்வளவு தான்..:))

@ நாகா ..

நன்றி நாகா..
என்ன எழுதவே மாட்டிங்க..

வினோத்கெளதம் said...

@ ஷண்முகப்ரியன் ..

நன்றி சார்..
Hyderabadல் இருந்து வந்திட்டிங்கள..:)

@ பின்னோக்கி ..

நன்றிங்க,..

ஆமாம் நீங்கள் சொல்லுவது சரி தான் விடுமுறை நாட்களில் வேறு மாதிரியான அனுபவத்தை கொடுக்கும்..அதுப்போல பண்டிகை நாட்களில் நான் சாற்று அதிகம் இருப்பதை போல் உணருவேன்..முதல் வருகைக்கு நன்றி..

ஆ.ஞானசேகரன் said...

அருமை வாழ்த்துகள்

வினோத்கெளதம் said...

நன்றி தல..

thenammailakshmanan said...

eetheethu vinod vitta kavithai mathiri oru pathuvula ellar manasaiyum kollai adichchutiingalee

engalukku ethavathu edam irukka micham ?

shopping malls ellam visit pannitu varoom
then Deira park and dolphin show and cable cars

next in rest of the fridays

athula Al Ain im irukku

suriyanaip pathi super pathivu

ellar kuzanththaithanamana manasum ontrip pora mathiri

nice vinod keep it up

to express such things in a nice way is a gods gift for u

கார்த்திகைப் பாண்டியன் said...

அட்டகாசம்..:-)))

r.selvakkumar said...

வித்தியாசமான அருமையான பதிவு

குமரை நிலாவன் said...

பதிவு நல்லா இருக்கு

அபுஅஃப்ஸர் said...

வெயில் வளைகுடாவிற்கு மட்டும் வேறுமாதிரிதான் தெரிகிறது சில நேரம் வெறுப்பும்கூட (ஏஸியினால் கொஞ்சமேனும் காத்துக்கொள்கிறோம்)

நல்லா எழுதிருக்கீங்க‌

வினோத்கெளதம் said...

நன்றி கார்த்தி..:)

வருகைக்கு நன்றி செல்வகுமார்..:))

நன்றிங்க thenammailakshmanan ..நிதனாமாக எல்லா இடத்தையும் பாருங்கள்..

நன்றி குமாரை நிலவன்..ஆளையே பார்க்க முடியுல..:)

நன்றி அபுஅஃப்ஸர்..வளைகுடா என்றாலே வெயில் தானே..

Muniappan Pakkangal said...

Unmayil nalla pathivu raasa.Anga adikkira veyilla namma ooru veyil ninaivu vanthiruchaapaa.Chennai veyila verthu oothum,athai maranthitiyaappaa ?

PREMAKUMAR said...

அடுத்து என்னப்பா.. மழை, காற்று, தண்ணீர்....

நன்றி

kanagu said...

வெயில் இல்லனா மழை அழகா இருக்காதுங்க... மத்தவங்கள அழகா காமிக்க வெயில் அப்படி நடந்துக்க வேண்டியதா போயிடுது... :)

/*பிரிவின் துயரத்தால் என் கண்களில் இருந்து வழிய தொடங்கும் முதல் சொட்டு கண்ணீரை கூட உன் உக்கிரத்தால் தன்வசம் இழுத்துக்கொள்ளும் உன் சூடு இப்பொழுது எல்லாம் என் மேலே பட்டாலே அருவெறுப்பாக இருக்கின்றது..*/

இந்த வரிகளை எழுத்துநடைக்காக மிகவும் ரசித்தேன் :)

அன்புடன் அருணா said...

நல்லா பதிஞ்சுருக்கீங்க!பூங்கொத்து!