Thursday, June 3, 2010

யாரு யாரு என்ன ஜாதி

யாரு யாரோ ஏது ஏதோ தொடர்ப்பதிவு ஆரம்பிக்கிறாங்க..நாம ஏன் ஒரு தொடர்ப்பதிவு ஆரம்பிக்கக்கூடாதுன்னு சிந்தித்ததின் விளைவு தான் இந்த பதிவு..அதாவது பதிவுலகத்தில் இருக்கும் பதிவர்களோட ஜாதி என்னவெல்லாம் இருக்கும்னு ஒரு குத்துமதிப்பா ஆராயறது..ஏன்னா இதுக்கப்புறம் அதை படிக்கபோறவங்க நிறையா விஷயங்கள் தெரிஞ்சிக்கிட்டு அதன்மூலம் அவங்க நடத்தைகளை சுலபமா யூகிக்கமுடியும் பாருங்க..அதுக்காகவே அவங்க குணநலனையும் கொடுத்துள்ளேன் அதுவேற இல்லமா எதிர்க்காலத்தில் எதாவது பிரச்னைனா அவங்க ஜாதி என்னனு தெரிஞ்சிக்க நாயா பேயா அலைய வேண்டியதில்லை..இந்த தொடர்ப்பதிவ ஒரு எட்டு பார்த்தாலே போதும்.. நான் ஒரு ஐந்து பேர் ஜாதிய யூகித்து சொல்றேன் ..அவங்க அப்படியே ஒரு ஐந்து பேர் ஜாதிய யூகிச்சு சொன்னாங்கனா அப்படியே எல்லோரடைய ஜாதியையும் ஓரளவு ஒரு ஒரு மாசத்துக்குள்ள யூகித்துவிடலாம்...தொடர்ப்பதிவும் ரொம்ப சிறப்பா போகும்..அவங்க ஜாதி அதுவில்லை என்னும் பட்சத்தில் பின்னூட்டதில் குறிப்பிடவும்..

முதல் போணி:

பதிவர் : 'சங்கு' சகடை

ஜாதி (யூகிப்பு) : ராஜப்பாளையம்

குணநலன்கள் : சும்மா இருக்கும் தெருவில் சங்கு ஊதுவது, போட்டு கொடுப்பது, நம்ப வைத்து கழுத்தறுப்பது.

இரண்டாம் போணி:

பதிவர் : 'பட்டாசு'

ஜாதி (யூகிப்பு): டால்மேஷன்

குணநலன்கள் : அமைதியாக இருக்கும் இடத்தில பட்டாசு கொளுத்தி போடுவது, எல்லாம் தெரிந்த மாதிரி காட்டிக்கொள்வது, கிடைத்த கேப்பில் எல்லாம் ஏறி அடிப்பது அதாவது சந்தில் சிந்து பாடுவது.

மூன்றாம் போணி:

பதிவர் : 'அல்லக்கை' அழகு

ஜாதி (யூகிப்பு): ஜெர்மன் ஷெபெர்ட்

குணநலன்கள்: கூச்ச படாம 'கூஜா' தூக்குவது, சொம்பு அடிப்பது, 'வெட்டி' செக்குலரிசம் பேசுவது, காசுக்கு தகுந்தமாதிரி ஆள் பார்த்து ஆப்பு அடிப்பது.

நான்காம் போணி:

பதிவர் : 'கோண' வாயன்

ஜாதி (யூகிப்பு): அல்சேஷன்

குணநலன்கள்: சாமி கும்பிட மாட்டாங்க ஆனா மாமிய கும்பிடுவாங்க, பெண்கள் என்றால் தெய்வமாக மதிப்பார்கள், அநியாயத்திற்கு எதிராக பொங்கி எழுவார்கள்.

ஐந்தாம் போணி:

பதிவர் : 'மென்டல்' முருக்கன்

ஜாதி (யூகிப்பு): பொமேரியன்

குணநலன்கள்: ரோட்ல போறப்ப டக்குனு காரி துப்புவாங்க ஆனா யாருமேல துப்புராங்க அப்படிங்கிறது அவங்க 'மூட்' பொருத்தது . ஒரு ஜாலிக்காக அப்பப்ப அவங்க மேலயும் துப்பிபாங்க..டிசைன் டிசைனா வேற துப்புவாங்க.

அம்புட்டு தான் இப்ப மேல நான் குறிப்பிட்டுள்ள பதிவர்கள் தான் நான் இந்த தொடர்ப்பதிவை மேற்கொண்டு எழுத அழைக்கும் பதிவர்களும்..ஜாதிவெறி இருந்துச்சுனா கொஞ்சம் வேகமா எழுதுங்க ப்ளீஸ்..

21 comments:

Prathap Kumar S. said...

யாருய்யா...அது ஜாதி கலவரத்தை தூண்டறது....

தலைவா... நம்ம ஜாதியை பத்தி தப்பா சொல்றான் தலைவா.....
பஸ்சை கொளுத்துங்கடா, ரயிலை மறிங்கடா...
பிளைனை நிறுத்துங்கடா.... யார்கிட்ட...

வினோத் கெளதம் said...

வாழ்க Communism வளர்க Secularism

வினோத் கெளதம் said...

எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்கள், எலக்கியவாதிகள் எங்கிருந்தாலும் வாழ்க..

Prabhu said...

no comments.. :)

கார்த்திகைப் பாண்டியன் said...

ரொம்ப நாளா எழுதாம இருந்த பயபுள்ளைங்கள எல்லாம் எழுத வச்சதுதான் மிச்சம்..இதுக்காக சிரிக்கிறதா அழுவறதா?

//எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்கள், எலக்கியவாதிகள் எங்கிருந்தாலும் வாழ்க..//

அது யாருப்பா?

கோபிநாத் said...

மச்சி யாருடா அது தனியாக தெருவுல போறது....;)))

தமிழ் உதயம் said...

நல்லா இருக்கு.

ப்ரியமுடன் வசந்த் said...

:)))

kishore said...

என்ன சொல்றது ? வாழ்க "ஜன(நாய்)யகம் "

Anonymous said...

Today Times of India reports:

In a UP village, a brother hacked to death his sister for marrying a man of lower caste.

எனவே நாமெல்லாரும் நாடகமாடுகிறோம்.

geethappriyan said...

பிரபல பதிவன் என்னும் தலைக்கனத்தில் ஜாதிகளை தப்பாய் பேசிவிட்டீர்கள் மிஸ்டர் கௌதம் மேனோன்,உங்களுக்கு ஆப்பு வைக்கும் முன் பதிவை ஜஸ்ட் லைக் தட் தூக்கி விடவும்,யோவ் ஸ்மைலி பொட்டுட்டேன்யா.

வால்பையன் said...

இப்படி சாதி இருக்குன்னு அதுகளுக்கு தெரியுமா தல!

PPattian said...

:))))))))))))))

வினோத் கெளதம் said...

@ நாஞ்சில் பிரதாப்

யோவ்..நான் எங்கய ஜாதி கலவரத்தை தூண்டுறேன் ..தூண்டுற ஆளுங்கள எல்லாம் கேக்காதிங்க..:)

@ pappu

Welcome Pappu..

@ கார்த்திகைப் பாண்டியன்

ஆஹா..அது குறிப்பிட்டு யாரும் இல்லை..சும்மா ஒரு லுல்லலாயி..


@ தமிழ் உதயம்

நன்றி தமிழ் உதயம்

@ ப்ரியமுடன்...வசந்த்

நன்றி வசந்த்..ஊர்லருந்து வந்தாச்சா..எல்லோரும் நலமா..

@ KISHORE

ஆஹா...

@ கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்

குரு நீங்க வேற எதாச்சும் கொளுத்தி போட்டுட்டு போய்ட போறீங்க..:)

@ வால்பையன்

அதுகளுக்கு தெரியாம இருக்குறது தான் நல்லது வால்ஸ்..:)


@ PPattian : புபட்டியன்

நன்றி தல..

துளசி கோபால் said...

அதெப்படி??????
மூணும் நாலும் ஒரே ஜாதிதானே?
உட்பிரிவு கூட இல்லையே.

ஜாதி விஷயத்துலே பிழை வரக்கூடாது பாருங்க. அதான்......

சாந்தி மாரியப்பன் said...

இங்கேயுமா!! அட ஆண்டவா :-)))

வினோத் கெளதம் said...

@ துளசி கோபால்

இரண்டும் ஒன்றா...!!!

நன்றி துளசி டீச்சர்..

@ அமைதிச்சாரல்

நன்றி அமைதிச்சாரல் வருகைக்கு ..

Nathanjagk said...

நாய் சேகர்: ஏய்.. என்னை வச்சு காமடி கீமடி பண்ணலயே?

மங்குனி அமைச்சர் said...

நல்லாத்தான் இருக்கு ,
பதிவர் : ஜூலை காற்றில்
ஜாதி : ராஜபாளையம்

பாலா said...

எம்புட்டு தடவ ஏரியா மாத்துவீங்க.?? எப்பப் பார்த்தாலும்.. ‘இப்டி ஒரு ப்ளாகே கெடையாது”-ன்னு கூகிள் சொல்லுது.

ஆனா நீங்களும் மாசத்துக்கு ஒரு பதிவு எழுதறீங்க போல?!! :) :)

Muniappan Pakkangal said...

Enna aachuppa unakku-sonmnapadi kekkura Labrador yaarum illaiyaa.