பிரிவு பல சமயங்களில் மிக கொடுரமான வலியாக இருக்கிறது. மனிதர்களை மட்டுமல்ல நமக்கு பிரியப்பட்ட சூழலை விட்டு பிரியும்ப்பொழுதுக்கூட அதற்கு சமமான வலியை அனுபவிக்க தான் செய்கிறோம். ஒன்று அதேப்போல் நாம் கடந்து போகவேண்டிய சூழலை வலுக்கட்டயமாக ஏற்றுக்கொள்கிறோம் இல்லை பழக்கப்படுத்தி கொள்கிறோம். போகும் சூழல் நமக்கு பழக்கப்படாத, நம்மில் எளிதில் உள்வாங்க முடியாத சூழலாக இருப்பின், இன்னும் கதை கந்தல் திருவிழாவில் காணாமல்ப்போன குழந்தையைப்போல் மனநிலை எதையோ தேடிக்கொண்டிருக்கும். யாரவது தெரிந்தவர்கள் கண்ணில் படமாட்டார்களா, ஆறுதல் வார்தைகள் கிடைக்காதா என்று கண்ணில் தேக்கிவைத்த கண்ணிறோடு அதுவரை அலைந்துக்கொண்டே தானிருப்போம்..
கிட்டத்தட்ட அதேமாதிரி ஒரு மனநிலையோடு இரண்டொரு நாளாக அலைந்துக்கொண்டிருக்கிறேன்..நான் அமீரகம் வந்து இரண்டு வருடங்களாக தங்கியிருந்த இடத்தை விட்டு வேறு ஒரிடத்திற்க்கு மாறவேண்டிய நிர்பந்தம் மாறியும் விட்டேன்..
ஆனால் ஏதோ மிக நெருங்கிய நண்பனை பிரிந்து வந்து விட்டதைப்போல் ஒருணர்வு நெஞ்சின் மீது சிறுபாரமாய் இருந்து அழுத்திக்கொண்டே இருக்கிறது..அந்த பழைய சூழலின் தாக்கம் இன்னும் மனதை விட்டு அகல மறுக்கிறது..அதுவும் புதிய இடத்தின் தனிமை இன்னும் கொடியதாக உணர்கிறேன்..தனிமை சில சமயங்களில் மட்டுமே மகிழ்ச்சியை ஏற்ப்படுத்துக்கிறது..பல சமயங்களில் யோசிக்க வைக்கிறது..ஏற்ப்படும் சிந்தனைகள் யாருமில்லாத பொழுதுகளில் இன்னும் என்னை பலவினமாக்குக்கிறது..இருக்கும் சூழலை ஏற்றுக்கொண்டு வாழும் மனிதர்களை பார்க்கும்பொழுது சற்று பயமாகவும், என்னை திரானியற்றவனாகவும் உணர்கிறேன்..
அதுவும் அந்த பழைய இடத்தை விட்டுபிரியும் கடைசி மணிநேரங்களில், இந்தியாவிலிருந்து விடுமுறை கழித்து ஆமீரகம் வந்தப்பொழுது உணர்ந்த அதே அதிர்வுகள்..இத்தனைக்கும் அந்த பழைய சூழலை பலமுறை வெறுத்துள்ளேன்..ஆனால் இன்று அது நினைவுப்படுத்தும் எண்ணங்கள் இனிமையனதாகவே இருக்கின்றது.இதுவும் கடந்துபோகும் என்ற மனநிலையோடு ஏற்கனவே வலுக்கட்டயமாக கடந்துவந்த சில சூழலைப்போல் இதையும் கடக்கதான் போகிறேன்.
26 comments:
இதுக்கும்.. நாங்க ஓட்டு, கமெண்ட் எல்லாம் போடுவோம்.. தெரியுமா?? :)
பிரிவு என்கிற உணர்வை உணர்ந்தவர்களால், நிச்சயம் உங்கள் பிரிவு துயரை உணரமுடியும்.
என்னாப்பா இவண் ரூம் மாறுரதுக்கெல்லாம் இவ்ளோ ஃபீல் பண்ணுறான்..
நான் துபாய்ல இரண்டு வருடத்தில் ஆறு முறை ரூம் மாறி விட்டேன்.
ஃபீல் பண்ணாத மச்சி.. சீக்கிரம் ரூம் செட் ஆகிரும்
ஹாலிவுட் பாலா said...
இதுக்கும்.. நாங்க ஓட்டு, கமெண்ட் எல்லாம் போடுவோம்.. தெரியுமா?? :)
===============
கண்ணா.. said...
என்னாப்பா இவண் ரூம் மாறுரதுக்கெல்லாம் இவ்ளோ ஃபீல் பண்ணுறான்..
நான் துபாய்ல இரண்டு வருடத்தில் ஆறு முறை ரூம் மாறி விட்டேன்.
ஃபீல் பண்ணாத மச்சி.. சீக்கிரம் ரூம் செட் ஆகிரும்
===============
பெரிசா ஒரு ரிப்பீட்டேய்..
யோவ் குரு..
என்னவோ ப்போ இதுக்கெல்லாமா ஃபீல் பண்ணுவே...தனிமையும் ஒரு வரம்,அதையும் ரசிக்க கத்துக்கோய்யா.நானும் ஆறு ரூம் மாறிட்டேன்.:))
===============
கமெண்டும் போட்டாச்சி,ஓட்டுக்களும் போட்டாச்சி.
மனதின் வலி வார்த்தைகளில் தெரிகிறது தல.. இதுவும் கடந்து போகும்.. ரிலாக்ஸ்மா..
யோவ் நீ என்ன பச்சக்குழந்தையா இப்படி பீல் வுட்டுட்டுருக்கே...
இந்தியாவுலேருந்து இம்புட்டு துரம் வந்தாச்சு இனி புதிய இடம் என்ன பழைய இடம் என்ன எல்லாம் ஒண்ணுதான்...போகபோக சரியாயிடும்...
//நான் துபாய்ல இரண்டு வருடத்தில்
ஆறு முறை ரூம் மாறி விட்டேன்.//
ரிப்பீட்டேய்...சூப்பரா சொன்னவே...எங்க கதைல்லாம் கேட்டா புள்ளை அழவே ஆரம்பிச்சுடுவான் போல... ப்ரீயா வுடு மாமே....
ஃபீல் பண்ணி ஒரு பதிவு எழுதவிட மாட்டுறஙப்பா.. :)
@ ஹாலிவுட் பாலா
போட்டு தான் ஆகனும்..இல்லை நாங்களே வந்து தொல்லை கொடுப்போம்..
@ தமிழ் உதயம் ..
நன்றி தமிழ் உதயம்..உணர்ந்த்தர்க்கு..
@ கண்ணா
யோவ் கொஞ்சமாச்சும் ஃபீல் பண்ண விடுங்கயா..:)
//சீக்கிரம் ரூம் செட் ஆகிரும்//
செட் ஆகிட்டாலும்..
@ குரு..
குரு ஒவொருத்தருக்கும் ஒவ்வொரு ஃபிலிங் லூஸ்ல விடுங்க..
@ கார்த்திகைப் பாண்டியன்..
கார்த்தி கொஞ்சம் ஒவரா புலம்பிட்டனோ..!!
@ நாஞ்சில் பிரதாப்..
யோவ் பிரதாப்..நீயுமா..தெரியுமா புலம்பிட்டேன், கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கவே..
@ தீபிகா சரவணன்..
இந்த ரணக்களத்திலயும்..
கலந்துக்கிறேன்..கலந்துக்கிறேன்..
உண்மை தான் வினோத். ஒவ்வொரு இடத்தின் மீதும் ஒரு வித பற்று ஏற்பட்டு விடுகிறது தான்.
இதுவும் கடந்து போகுமா பரவாயில்லையே பிள்ளை வ்ளர்ந்திருச்சு
ஆமாம் வினோத் எப்பவும் விட்டுப் பிரியும் போதுதான் துயர் தெரியும் மாற்றிக்கொண்டு விட்டீங்க உங்களை அதுவே போதும்
ரொம்பவே சென்சிடிவ் டைப்பா இருக்கிங்க வினோத்.
டேக் கேர்.
நான் வேணும்னா குரியார்ல நாளு கைக்குட்டை வாங்கி அனுபவா?...பாவம் அழாதீங்க...உங்க பழைய ரூம்ல இருக்கறவங்க கொஞ்சம் நிம்மதி பெரு மூச்சி விட்டு சந்தோசமா இருப்பாங்க இப்போ :))))
ஏலேய் 15 ஓட்டு டா மச்சி ;))
ஏலேய் நம்ம அன்னிக்கு எடுத்த வீடியோவை பாருடா எல்லாம் சரியாகிடும் ;))
@ ச.செந்தில்வேலன்
ஆமாம் செந்தில் உண்மை தான் ..
நன்றி..
@ thenammailakshmanan
மாறியாக வேண்டிய சூழ்நிலை..
ஆமங்க வளர்ந்துக்கிட்டே இருக்கேன்..:)
@ வரதராஜலு .பூ
//ரொம்பவே சென்சிடிவ் டைப்பா இருக்கிங்க வினோத்.
டேக் கேர்.//
அது இன்னவோ உண்மை தான் தல..
நன்றி..
@ அஷீதா..
என்னடா புள்ள பிஃல் பண்ணி ஒரு பதிவு எழுதியிருக்கே..கொஞ்சமாச்சும் நம்மலும் பிஃல் பண்ணுவமேனு யாரச்சும் இருக்கிங்கள..எல்லோர்க்கும் நக்கல்..நானும் வச்சிக்கிறேன்..:)
@ "நானா நீயா" Gopinath
//ஏலேய் நம்ம அன்னிக்கு எடுத்த வீடியோவை பாருடா எல்லாம் சரியாகிடும் ;))//
இப்படி மொட்டயா சொல்லதே
நித்தி-ரஞ்சி விடியோ மாதிரி ஏதோ
ஏடகூட விடியோனு படிக்கிறவங்க தப்பா எடுத்துக்க போறஙக..:))
போன்ல என்கிட்ட புலம்புன சரி.. அது என்னோட போகட்டும் பரவாஇல்ல.. இப்ப அதையே பதிவா போட்டுட்டியே?
பாரு எத்தன பயபுள்ளைங்க உன்னோட பீலிங்க்ஸ்ச நக்கல் அடிக்கிதுங்க .. நான் எதாவது ஒரு வார்த்தை நக்கலா சொல்லி இருப்பனா ? அதுதான்டா நட்பு.. ( ஐயோ சாமி யாரவது காப்பாத்துங்க நாலு நாளா இதையே தான் பொலம்பிகிட்டு திரியுறான்.. )
சாரி மச்சி கமெண்ட் சொல்ல மறந்துட்டேன்.. இந்தா புடிச்சிக்கோ..
"மனசுல உள்ள கஷ்டத்த எழுத்துல செதுக்கி இருக்க மச்சி.. அருமையான பதிவு ".
சிலநேரங்களில் சூழ்நிலைத் தருணங்களே நம்மைப் போன்றவர்களை நகர்த்திச்செல்லும்..
கவலையை விடுங்க பாசு
இடங்களும் மனிதர்கள் போலவே வினோ.அதை அழகாய் இங்கு பதிவு செய்கிறீர்கள்...
@ Kishore
பொறுத்தருள்க..
@ குமரை நிலாவன்
நன்றி தல..கால் பண்ணதற்க்கும் மிக்க நன்றி தல..:)
@ பா.ராஜாராம்
ஆமாம் சார்..அதை உணர்ந்தேன்..
நன்றி..
இடம் பெயர்தல் என்பது எளிதான விஷயம் இல்லை. காலம் அனைத்தையும் சரி செய்யும்
Pirivu-Ranam,itz all in the world Thambi.You have to make up your mind and wait for the cloud to pass.
ஆணி புடுங்கியாச்சா????
@ பின்னோக்கி
நன்றி தல..
@ Muniappan Pakkangal..
I donno watz beyond d cloud..Hopefully waiting 4 some rays to fall on me..:)
Tx doctor.
@ ஜெகநாதன்
ஆணியை ஒரு இடத்தில் அடிச்சு வச்சிருந்தா பரவில்ல தல..சரமாரியா அடிச்சு வச்சிருக்காங்க புடுங்க புடுங்க வந்துக்கிட்டே இருக்கு..:)
பிரிவு என்று வந்தபோது அது மனிதர்களாக இருந்தால் என்ன, இடமாக இருந்தால் என்ன... வலி துளியளவாவது இருக்கத்தான் செய்யும். கால்ம் ஒரு மருந்து நண்பா... :)
//என்னாப்பா இவண் ரூம் மாறுரதுக்கெல்லாம் இவ்ளோ ஃபீல் பண்ணுறான்..//
பெஸ்ட் காமெண்ட் lol
Thanks Yogi for ur comment..;)
நான் வந்திட்டேன்
உங்கள் ஆக்கங்களை
உடம்புக்கு முடியாமல் இருந்த நாட்களில் கூட
தினமும் படித்தேன். பதில்தான் எழுத முடியாமல் போய்விட்டது.
இனி வரும் நாட்களில் மீண்டும் உங்களுடன் இணைந்திருக்கிறேன்.
நலம் விசாரித்த உங்களுக்கு மீண்டும் நன்றி.
@ தியாவின் பேனா
வாங்க நண்பா..குணமடைந்து வந்ததில் மிகவும் மகிழ்ச்சி..
Post a Comment