Sunday, March 7, 2010

திங்கள் இனிதே - 6

இங்கிருக்கும் என் நண்பர் ஒருவர் ஊருக்கு சென்று திரும்பிவந்து விட்டார். அவர் ஊரில் இருக்கும்பொழுது "நான் எதாவது அவரிடம் கொடுத்து அனுப்பட்டுமா, சாப்பிட எதாவது வேணும்னா சொல்லுடா கொடுத்து அனுப்புறேன்.." என்று என்அம்மா போன் பண்ணும் பொழுதெல்லாம் கேட்டுகொண்டே இருந்தார். நான் எப்பொழுதும்போல் "இல்லை ஒன்றும் வேண்டாம், எல்லாமே இங்க கிடைக்குதுமா" என்றே சொல்லிவந்தேன். ஆனால் என்ன நினைத்தேன் என்று தெரியவில்லை ஒரு நாள் அப்படி கேக்கும்பொழுது "அம்மா காரக்குழம்பு சாப்பிடனும்போல் இருக்கும் அதுமட்டும் வேண்டுமானால் கொடுத்துஅனுப்புங்கள், ஆனால் அதற்காக நீங்கள் சென்னை வரவேண்டியஅவசியமில்லை யாரவது சென்னை போனால் அவரிடம் கொடுத்து என் நண்பரிடம் கொடுக்க சொல்லிவிடுங்கள்'' என்றேன்.

ஆனால்
என் அம்மாவே புதுவைலிருந்து சென்னை ஏர்போர்ட் வரை வந்து அவரிடம் கொடுத்துவிட்டு சென்று விட்டார்.புதுவை திரும்பிய கையோடு வேலைக்கு வேறு செல்லவேண்டும்.இது தெரிந்து தான் நான் 'அப்பவே' வேணாம்னு சொன்னேன். நான் என்னத்த சொல்லுறது..!! நான் ஊரில் இருந்தால் இதற்கெல்லாம்அவசியமே இல்லை.

(''ஏன்டா டேய், இவ்வளோ பேசுற நீ ஊர்ல போய் வேலை பார்க்க வேண்டியதுதானே, அதை விட்டுட்டு அம்மா பிளைட்ல குழம்பு கொடுத்து அனுப்புனாங்க, ஆயா கப்பல்ல ரசம் கொடுத்து அனுப்புனாங்கன்னு சொல்றியேன்னு "..நீங்க சொல்லுறது கேக்குது மக்களே, அதற்கான முயற்சிகளும் பண்ணிக்கொண்டு தான் இருக்கிறேன்).
....................................................................................................................

ஹாக்கி
உலககோப்பை இந்தியாவில் நடக்கும்ப்பொழுதே, இந்திய அணியால்'அரையிறுதிக்கு' கூட முன்னேற முடியவில்லை. இங்கிலாந்து முதல் ஆளாக அரையிறுதிக்கு தகுதிபெற்று விட்டது.(அது தான் கோப்பையை தட்டிசெல்லும் என்று நினைக்கிறேன்).வீராவசேமாக பாகிஸ்தானை வீழ்த்தியோதோடு நாமும் வீழ்ந்து விட்டோம். சொல்லிவைத்தார் போல் அதற்கடுத்து மோதிய ஆஸ்திரேலியா, ஸ்பெயின் அணிகளிடம் 2-5 , இங்கிலாந்துடன் 3-2 என்ற கணக்கில் தோற்றோம். அணியில் பிரச்சனையா, ஹாக்கி சங்கத்தில் பிரச்சனைகளை களைய வேண்டுமா, அரசாங்கம் நம் தேசிய விளையாட்டின் மீது 'தீவிர' கவனம் செலுத்த வேண்டுமா, இல்லை 'நம்' அணுகுமுறை மாற வேண்டுமா?!. என்ன ஆனா என்ன அடுத்து ஐபிஎல் வரப்போகிறது, அதில் கவனத்தை செலுத்துவோம்.
.....................................................................................................................

அடுத்து நம்ம 'நித்தி'யை பற்றி பார்ப்போம். ’வீடியோ’ சுமார்னு கூட சொல்லமுடியாது.
ரொம்ப மோசம். சன் டீவி பண்ணது அதுக்கு மேல மோசம்.

பொதுவாகவே நமக்கு இந்த 'ஒழுக்க கட்டுப்பாடுகளில்' இருந்து மீறி 'தப்பை' செய்வதில் ஆர்வம் இருக்கும், ஆனால் சமூக கட்டுப்பாடுகள் காரணமாக அடக்கியே வாசிப்போம். அதையும் மீறி யாராவது செய்தால் அதை 'தெரிந்துகொள்வதில்' ஒரு ஆர்வம் காட்டுவோம்(கிட்டதட்ட தினசரியில் 'கள்ளக்காதலை' பற்றி படிக்கும் விஷயத்தில் இருக்கும் ஆர்வம்). அதுவும் 'சாமியார்' என்கின்ற பட்சத்தில் அவருக்கு நாம் வகுத்திருக்கும் 'ஒழுக்க விதிமுறைகள்' இன்னும் அதிகம். சாமியாரே அவருடுய இந்த 'விதிகளை' மீறுகின்ற பொழுது நம்ம பண்ணுறது எல்லாம் ஒரு 'மேட்டரே' இல்லை என்கின்ற அல்ப சந்தோஷம் ஒருப்புறம்.

ஸோ,'மேட்டர்' என்னனா தனிமனித ஒழுக்கங்களும், விதிகளும் தான். அது எந்த மதத்தை சேர்ந்த 'பெரிய மனிதர்களாக' இருந்தாலும் சரி.ஆனா எப்ப எவன் மாட்டுவான்னு காத்திருந்து 'அந்த மதத்தை' தூற்றுவது சின்னபிள்ளத்தனம். அதுவும் நம் பதிவுலக 'அதிமேதாவிகள்' இந்த விஷயத்தில் காட்டும் அக்கறை அவர்கள் குடும்பத்தில் கூட காட்டமாட்டார்கள்.
....................................................................................................................

ஷார்ஜாவை பொறுத்தவரை எனக்கு கொஞ்சம் பொறாமை தான்.நிறையா தமிழ் மக்கள், தமிழ்ப்படங்கள் ரீலிஸாகும் தியேட்டர்கள்,அப்புறம் அமீரகத்தின் பிரபல பதிவர்கள் எல்லாம் அங்கே தான் இருக்கின்றனர் முக்கியமா 'தமிழ்' உணவகங்கள். நான் இருக்கும் ஊரில்(அல்-அய்ன்) ஒரு உருப்படியான உணவகம் கூடயில்லை.ஷார்ஜாவில் எங்கு போகினும் நல்ல உணவு கிடைக்கின்றது.ஊரில் இருக்கும்ப்பொழுது 'சாப்பாடு' எல்லாம் எனக்கொரு பொருட்டே இல்லாமல் இருந்தது ஆனால் இங்கு வந்து சிலசமயம் மனது அதை எதிர்ப்பார்கின்றது. சரி, அதையும் மீறி சிலசமயம் நானே சமைத்துப்பார்க்கலாம் என்று 'ரிஸ்க்' எடுத்தாலும் அதன்ப்பிறகு எந்த சாப்பாட்டை பார்த்தாலும் கொஞ்சநாட்களுக்கு ஒருவித 'பீதியா' தான் இருக்கு.
..........................................................................................................................

வேலை வேலை வேலை..இந்த ரெண்டு மாசமா இப்படி தான் போகுது. இரவு வீடு திரும்பி ப்ளாக்ல எதாச்சும் கிறுக்கலாம்னு பார்த்தாலும் ''இந்த ரணக்களத்துலயும்ஒரு கிளுகிளுப்பான்னு'' மனசாட்சி கேக்குது..இன்னும் முடிக்கவேண்டிய பணிகள் நிறையா இருக்கு.பார்ப்போம் வரும் மாதங்கள் எப்படி அமைக்கிறது என்று.
...........................................................................................................................

தல cool down and get relaxed for some minutes ..உங்களின் இனிமையான சில நினைவுகளை மீட்க ஒரு அருமையான பாட்டை உங்களுக்கு அர்ப்பணிக்கிறேன். பாட்டை பாருங்கள் நினைவுகளை 'மீட்க' முடியாவிட்டால் நான் பொறுப்பல்ல..எத்தனையோ பாட்டு இருக்கறப்ப 'இந்த பாட்டு' மட்டும் எதுக்கு!! பாருங்க உங்களுக்கே தெரியும்.




35 comments:

Unknown said...

நல்லாக்கீதுபா திங்கட்கிழமை..

இத்தோட மகளிர் தினத்துக்கும் வாழ்த்து செப்பியிருக்கலாம்..

கோபிநாத் said...

\\நீங்க சொல்லுறது கேக்குது மக்களே, அதற்கான முயற்சிகளும் பண்ணிக்கொண்டு தான் இருக்கிறேன்).\\

எனக்கு என்னாமே கூண்டோடா கிளம்பிடுவோம் போல இருக்கு..;-))

\\\தமிழ்ப்படங்கள் ரீலிஸாகும் தியேட்டர்கள்\\

டேய் மச்சி ஒன்னே ஒன்னு தான்டா இருக்கு...அப்புறம் நானும் வி.த.வரு.பார்த்துட்டேனோ..ஐய் ;)))

கோபிநாத் said...

அப்போ காரக்குழம்பை நீயே தனியாக துன்னியா...பாவி...உனக்கு பின்னாடி @!^@^@$(&^@#((&^

Anonymous said...

திங்கள் இனிதே...காலையில் செய்தித்தாள் வாசித்த மாதிரி தகவல்கள்...

வரதராஜலு .பூ said...

வெகு நாட்கள் கழித்து திங்கள் இனிதே நன்றாகவே மலர்ந்திரக்கிறது.

வெல்கம் பேக்

Prathap Kumar S. said...

காரக்குழம்புக்காக அமீரகத்துலேருந்து வேலையை விட்டு இந்தியாவுக்கு போற ஒரே நாள் நீயாத்தாய்யா இருக்கும்...நாக்கை கன்ட்ரோல் பண்ண கத்துக்கோ மச்சி...நம்ம தலையெழுத்து அப்படித்தான்.

என்னது காஞ்சில தேவா வீடியோ பார்த்தியா...அதைத்தான்யா ரொம்ப நாளா தேடிட்டு இருக்கேன்... நித்யா வீடியோ சரியில்லை மச்சி...சென்சாரே இல்ல... வேஸ்ட்...

பாகிஸ்தானை நம்ம டீம் ஜெயிச்சாலே பெரிய விசயம்தான்... அதுபோதும்... கப்புல்லாம் காசு கொடுத்துவாங்கிடலாம் மச்சி...ப்ரியாவுடு...

கணேஷ் said...

நல்லா இருக்கு வினோத் ......

டக்கால்டி said...

நீங்க காரகுழம்புக்கு ஆசைப் பட்டு இந்தியா வர மாதிரி தெரியலையே..
ஊரு வேற புதுவைனு சொல்றீங்க...:-)

ப்ரியமுடன் வசந்த் said...

பாட்டும், அம்மாவின் குழம்பு மேட்டரும் ரசனைடா வினோத்...

PPattian said...

ஹாக்கி கொஞ்சம் கவலைதான். முத மேட்சே பாகிஸ்தானோட இருந்ததுதான் தப்போ?

நித்தி வீடியோ முழுசா பாத்துட்டீங்களோ? அதை பாக்கணும்கிற ஆர்வம் கூட இல்லை எனக்கு.

சமையல் செய்யணும்னா நல்ல கம்பெனி இருக்கணும்.. ரெண்டு அல்லது மூணு பேரா சேந்து சொதப்பிட்டு அப்புறம் வெளியே போய் ஒரு கட்டு கட்டலாம்.. :)

கருந்தேள் கண்ணாயிரம் said...

நல்லா இருக்கு :-) ஆனா ஓட்டு மட்டும் போட முடியலையே . .பட்டைகளை எடுத்து விட்டீரோ?

கண்ணா.. said...

//ஷார்ஜாவை பொறுத்தவரை எனக்கு கொஞ்சம் பொறாமை தான்.நிறையா தமிழ் மக்கள், தமிழ்ப்படங்கள் ரீலிஸாகும் தியேட்டர்கள்,அப்புறம் அமீரகத்தின் பிரபல பதிவர்கள் எல்லாம் அங்கே தான் இருக்கின்றனர்//

அடப்பாவி..............எனக்கு ரெண்டு நாளைக்கு ஜீரணமாகாதுடா.....


//என் அம்மாவே புதுவைலிருந்து சென்னை ஏர்போர்ட் வரை வந்து அவரிடம் கொடுத்துவிட்டு சென்று விட்டார்.புதுவை திரும்பிய கையோடு வேலைக்கு வேறு செல்லவேண்டும்.இது தெரிந்து தான் நான் 'அப்பவே' வேணாம்னு சொன்னேன். நான் என்னத்த சொல்லுறது..!!//

உங்க அம்மா உங்க மேல வச்சுருக்கற அளவில்லா பாசம் நல்லா தெரியுது

:)

கண்ணா.. said...

தமிழிஷ்ல போட்டோவில் உள்ள பாலகன் யாரு ????!!!!!!

Prabhu said...

அதுவும் நம் பதிவுலக 'அதிமேதாவிகள்' இந்த விஷயத்தில் காட்டும் அக்கறை அவர்கள் குடும்பத்தில் கூட காட்டமாட்டார்கள்.///

ஹி.. ஹி.. சியர்ஸ்... பாஸ் அவங்க வேலயத்தவங்க.... நம்ம பிஸி!

வினோத் கெளதம் said...

@ முகிலன்

//இத்தோட மகளிர் தினத்துக்கும் வாழ்த்து செப்பியிருக்கலாம்..//

ஆஹா மறந்துட்டனே.!! பரவாயில்லை தல இப்ப சொல்லிகிறேன் ''மகளிர் தின நல்வாழ்த்துக்கள்''

@ கோபிநாத்

//எனக்கு என்னாமே கூண்டோடா கிளம்பிடுவோம் போல இருக்கு//

சந்தோசம் தான் ஊர்லயும் அடிக்கடி சந்திச்சிக்கலாம்..:)

//டேய் மச்சி ஒன்னே ஒன்னு தான்டா இருக்கு...அப்புறம் நானும் வி.த.வரு.பார்த்துட்டேனோ.//

அதுவாச்சும் பார்கிறிங்கள..
அடப்பாவி VTV என்ன பார்க்க வேணாம்னு சொல்லிட்டு நீங்க எல்லோரும் பார்த்திட்டிங்க..

//அப்போ காரக்குழம்பை நீயே தனியாக துன்னியா...பாவி...உனக்கு பின்னாடி //

இல்லை இன்னுமிருக்கு அடுத்த வாரம் வரும்ப்பொழுது சுட வச்சி எடுத்துட்டு வரேன்..:)

@ தமிழரசி

நன்றி தமிழ்..மகளிர் தின வாழ்த்துக்கள் ..:)

@ வரதராஜலு .பூ

நன்றி தல..


@ நாஞ்சில் பிரதாப்

//நாக்கை கன்ட்ரோல் பண்ண கத்துக்கோ மச்சி...நம்ம தலையெழுத்து அப்படித்தான்.//

இன்னமோ தண்டனை பெற்ற ஆயுள்கைதி ரேஞ்சுக்கு பேசுற..:))

//அதைத்தான்யா ரொம்ப நாளா தேடிட்டு இருக்கேன்...//

தேடவேண்டிய இடத்தில தேடாமல் வேற எங்க எங்கயோ தேடி இருக்கனு நினைக்கிறேன்..:)

//பாகிஸ்தானை நம்ம டீம் ஜெயிச்சாலே பெரிய விசயம்தான்... அதுபோதும்... //

யோவ் இந்த தடவை வந்தப்ப அது ஒரு சொத்தை டீம்..கிட்டதட்ட செத்த பாம்பை அடித்த கதை தான்..

@ Ganesh

நன்றி கணேஷ்..வருகைக்கும் கருத்துக்கும்..;)

@ டக்கால்டி

//நீங்க காரகுழம்புக்கு ஆசைப் பட்டு இந்தியா வர மாதிரி தெரியலையே..
ஊரு வேற புதுவைனு சொல்றீங்க.//

நான் கொசு கடிச்சா கூட அதை ஒரு காரணமா சொல்லி திரும்பி போகனம்னு சொல்லுவேன் ..எனக்கு தேவை ஒரு காரணம் அவ்வளவு தான்..மத்தப்படி நீங்க சொன்னதும் ஒரு காரணம் தான்..;)

@ பிரியமுடன்...வசந்த்

நன்றி மச்சி..;)

@ PPattian : புபட்டியன்

//முத மேட்சே பாகிஸ்தானோட இருந்ததுதான் தப்போ? //

இல்லை தல..அந்த மேட்ச் தான் ''காட்டு காட்டுன்னு'' காட்டுச்சே இந்திய அணி..ஸ்பெயின், ஆஸ்திரேலியா இரண்டுமே கொஞ்சம் ''டஃப் டீம்கள்''..அப்புறம் ''இங்கிலாந்து அணியின்'' எழுச்சி குறிப்பிடதக்கது ..

//நித்தி வீடியோ முழுசா பாத்துட்டீங்களோ? //

சுத்த போர்..ஒரு சுவரசியமமும் இல்லை..

//சமையல் செய்யணும்னா நல்ல கம்பெனி இருக்கணும்..//

சத்தியமான வார்த்தைகள்..நான் இதை யோசித்து பார்த்திருக்கேன்..

@ கருந்தேள் கண்ணாயிரம்

நன்றி ராஜேஷ்..இல்லையே வோட்டு பட்டை எல்லாம் அங்கே தானே இருக்கு..அந்த சமயத்தில் எதாவது பிரச்னை இருந்திருக்கலாம்..

@ கண்ணா..

//அடப்பாவி..............எனக்கு ரெண்டு நாளைக்கு ஜீரணமாகாதுடா.....//

யோவ்..துபாய்ல மட்டும் இதெல்லாம் இல்லாத மாதிரி பேசுற..;)

/உங்க அம்மா உங்க மேல வச்சுருக்கற அளவில்லா பாசம் நல்லா தெரியுது/

absolutely..

//தமிழிஷ்ல போட்டோவில் உள்ள பாலகன் யாரு ????!!!!!!//

பாலகன் இல்லை பாலகி..என் சிஸ்டர் குழந்தை..:)

@ Pappu

//ஹி.. ஹி.. சியர்ஸ்... பாஸ் அவங்க வேலயத்தவங்க.... நம்ம பிஸி!//

யாரு நம்ம..அதுசரி..:)

kishore said...

நல்லா இருக்கு நண்பா.. :)

நித்தி.. தனி மனித ஒழுக்கம்.. ஸ்ஸ்ஸ்..எப்பா.. யாரு எதை பத்தி பேசுறதுன்னு ஒரு வரைமுறை இல்லாம போய்டுச்சி.. பேச சுதந்திரம் இருக்குனு எதவேனாலும் யாரு வேணாலும் பேசுறாங்க.. ஓ ..மச்சான் நீ இருக்கியா.. கவனிக்கல.. சாரி.. நீ சொன்னது உண்மை மச்சி.. அருமை..


ஆமா யாரோ 'தல' ன்னு சொல்லி இருக்கியே பாடெல்லாம் டெடிகேட் பண்ணி இருக்க.. யாரு அது? அவர பாட்ட பார்த்து வேற புரிஞ்சிக்க சொல்லி இருக்க.. அந்த பாட்டுல அப்படி ஒன்னும் இல்லையே .. திருச்சி.. காலேஜ் .. தவிர..
சரி அந்த 'தல' யார இருந்தாலும் நல்லா கேட்டுகங்க.. ஏற்கனவே ஒருத்தர 'தல' 'தல' ன்னு சொல்லி 'தறுதலை' ஆக்கி கும்மி அடிச்சிடானுங்க.. பார்த்து சூதானமா நடந்துக்குங்க பயபுள்ளைங்க கிட்ட.. :)

☀நான் ஆதவன்☀ said...

//அமீரகத்தின் பிரபல பதிவர்கள்//

வொய் திஸ் மர்டர் வெறி மாப்பி :)

சரி சரி அடுத்த தடவை வரும் போது அந்த காஞ்சிபுரம் பூசாரி வீடியோ எல்லாம் எடுத்துட்டு வா. சரியா?

சரி அந்த பாட்டை ஏன் அஜித்தை பார்க்கச்சொன்ன? ஆசை பட எபெக்டா?

வினோத் கெளதம் said...

//யாரு எதை பத்தி பேசுறதுன்னு ஒரு வரைமுறை இல்லாம போய்டுச்சி.. //

நான் சொன்னது நித்திக்கு மத்த சாமியார்களுக்கும்..தனிமனித ஒழுக்கம் என்பது ஒவ்வொரு மனுஷனுக்கும் வேணும்.அதுவும் என்ன மாதிரி ஆளுங்களுக்கு..ஸ்ஸப்பா..முடியல சரிவிடு.. ஜகா வாங்கிக்குறேன்..:)..
ஆனா இந்த இடத்தில ஒன்றை பெருமையோடு சொல்லிக்கொள்கிறேன் உன்னோட 'தனிமனித ஒழுக்கம்' பாராட்டதக்கது..:)

//'தல' ன்னு சொல்லி இருக்கியே பாடெல்லாம் டெடிகேட் பண்ணி இருக்க.. யாரு அது?//

ஆளாய் காணோம் ஒரே''பிஸி''..!!

@ ☀நான் ஆதவன்☀

//காஞ்சிபுரம் பூசாரி வீடியோ எல்லாம் எடுத்துட்டு வா. சரியா?//

பூசாரி வீடியோ தானே வேணும் எடுத்துட்டு வரேன் எடுத்துட்டு வரேன் ..!!

//சரி அந்த பாட்டை ஏன் அஜித்தை பார்க்கச்சொன்ன? ஆசை பட எபெக்டா?//

சரி அந்த பாட்டை ஏன் அஜித்தை பார்க்கச்சொன்ன? ஆசை பட எபெக்டா?

கார்த்திகைப் பாண்டியன் said...

// நாஞ்சில் பிரதாப் said...
காரக்குழம்புக்காக அமீரகத்துலேருந்து வேலையை விட்டு இந்தியாவுக்கு போற ஒரே நாள் நீயாத்தாய்யா இருக்கும்..//

ஹா ஹா ஹா..

//வீராவசேமாக பாகிஸ்தானை வீழ்த்தியோதோடு நாமும் வீழ்ந்து விட்டோம்.//

:-(((((

வினோத் கெளதம் said...

நான் Dedicate பண்ணது வேற 'தல'க்கு சூர்யா..

வினோத் கெளதம் said...

@ கார்த்திகைப் பாண்டியன்

நன்றி நண்பா வருகைக்கு..:)

Thenammai Lakshmanan said...

ஒருத்தர் கன்னக் குழியிலும் ஒருத்தர் கண்ணிலும் விழுந்து இருக்காங்க சீக்கிரம் நல்ல சேதியா சொல்லுங்கப்பா

வினோத் கெளதம் said...

என்ன நல்ல செய்தி கவிஞரே..!!

geethappriyan said...

குரு
உன்னைப்போல மெத்தப்படித்தவர்களுக்கு
எங்கு போனாலும் சிறப்பு தான்.
தயவுசெய்து அமெரிக்கா,கனடா,ஆஸ்திரேலியா , நியூஸிலாந்து போன்ற நாடுகளுக்கு செல்ல முயற்சிக்கவும்.
சீக்கிரமே இமிக்ரேஷன் கிடைக்க வாழ்த்துக்கள்
----------
அங்கே ஒரு ஐந்து வருடம் இருந்துவிட்டு இங்கு அமீரகம் வா
உனக்கு மாதம் 50000 திர்காம் கொடுப்பார்கள். இல்லையா நம்ம ஊருக்கே போய் பெரிய கம்பெனியில் சேர்ந்துவிடு.உன் படிப்புக்கு அருமையாய் கிடைக்கும்.
----------
யோவ் அம்மாவை இப்படியா அலைய விடுவ?
இங்க பொன்னுசாமி ஹோட்டல்ல காரக்குழம்பு கிடைக்கும்யா,ஒரு மாசத்துக்கு கூட ஃப்ரிட்ஜில் வைத்து சாப்புடலாம்.
அப்புறம் ஆச்சி ப்ராண்ட்ட்ல கார்க்குழம்பு மிக்ஸ் பாட்டிலில் கிடைக்குதுய்யா,என்னமோ போ...
நான் ஊருக்கு போவும் போது சொல்லு
----------
அந்த நித்யா மேட்டரில் யார் ஆண் யார் பொண்ணுன்னே தெரியலைய்யா.யூஸ்லெஸ் ஃபெல்லோ,இவ்வளவு செல்வாக்கு இருக்கு போயும்போயும் ஆண்டியையா உஷார் பண்னுவான்.எனக்கு 1கோடி இருந்தாலே நான் கேடி,1000 கோடியாம் யா.ஒமைகாட்
ஆனா பேக்ரவுண்டில் வந்த சின்ன் வீடு பட பாடல்கள் மிகவும் அருமை,யாரோ ரசித்து சேர்த்துள்ளனர்.

வினோத் கெளதம் said...

//குரு
உன்னைப்போல மெத்தப்படித்தவர்களுக்கு
எங்கு போனாலும் சிறப்பு தான்.//

குரு இது எதோ வஞ்சபுகழ்ச்சி அணி மாதிரியே இருக்குதே..:))

//தயவுசெய்து அமெரிக்கா,கனடா,ஆஸ்திரேலியா , நியூஸிலாந்து போன்ற நாடுகளுக்கு செல்ல முயற்சிக்கவும்.//

குரு இங்க எல்லாம் என்னை கமான் கமான்னு கூப்பிடுற மாதிரி..ச்ச்ம்மா சொன்னேன் குரு :))..எதா இருந்தாலும் அடிப்படை முயற்சி தேவை..எங்கிட்ட அது சுத்தமா ’’நகி லேது’’..பார்க்கலாம் குரு என்ன ஆகுதுன்னு..

//அங்கே ஒரு ஐந்து வருடம் இருந்துவிட்டு இங்கு அமீரகம் வா
உனக்கு மாதம் 50000 திர்காம் கொடுப்பார்கள்..//

மாதம் 50000 திர்காம் ஆஆஆஆ!!..இப்பவே மண்டையை சுத்தி ஸ்டார் ஸ்டாரா பறக்குது..:))

//நம்ம ஊருக்கே போய் பெரிய கம்பெனியில் சேர்ந்துவிடு.உன் படிப்புக்கு அருமையாய் கிடைக்கும்.//

குரு ஒரு முடிவோட தான் இன்னிக்கு களம் இறங்கிருக்கிங்க போல..:)

//அப்புறம் ஆச்சி ப்ராண்ட்ட்ல கார்க்குழம்பு மிக்ஸ் பாட்டிலில் கிடைக்குதுய்யா,என்னமோ போ...
நான் ஊருக்கு போவும் போது சொல்லு\\

கண்டிப்பா சொல்லுறேன் குரு..ஆனா இங்க அந்த ’’மிக்ஸ்’’ கிடைக்கமாட்டுது அதான் பிரச்சனை..

//எனக்கு 1கோடி இருந்தாலே நான் கேடி,//

குரு சீக்கிரம் கேடியாக வாழ்த்துக்கள்..:))

பத்மா said...

அம்மாகிட்ட கேக்கலாம் தப்பே இல்ல

kunthavai said...

//சிலசமயம் நானே சமைத்துப்பார்க்கலாம் என்று 'ரிஸ்க்' எடுத்தாலும் அதன்ப்பிறகு எந்த சாப்பாட்டை பார்த்தாலும் கொஞ்சநாட்களுக்கு ஒருவித 'பீதியா' தான் இருக்கு.

ச்ச இப்படியா பயப்படுறது... என் வீட்டுக்காரர் கூட ரெம்ப பயப்படுகிறார் (இத்தனைக்கும் நான் தான் சமைக்கிறேன்) .

வினோத் கெளதம் said...

@ Padma

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பத்மா..

@ Kunthavai..

//என் வீட்டுக்காரர் கூட ரெம்ப பயப்படுகிறார் (இத்தனைக்கும் நான் தான் சமைக்கிறேன்) .//

அதனால தாங்க பயப்படறாரு..:)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி குந்தவை.

அஷீதா said...

//நானே சமைத்துப்பார்க்கலாம் என்று 'ரிஸ்க்' எடுத்தாலும் //அதன்ப்பிறகு எந்த சாப்பாட்டை பார்த்தாலும் கொஞ்சநாட்களுக்கு ஒருவித 'பீதியா' தான் இருக்கு.//

vaazhkaila indha maadhiri risk ellam edukaadheenga.

unga amma unga mela vachirukura paasam nalla theriyudhunga. "ammaanna summa illa" :)

romba nalla irundhuchunga.

Muniappan Pakkangal said...

Nalla pathivu,nalla paatu vinoth Gowtham.

வினோத் கெளதம் said...

@ அஷீதா

ரிஸ்க் எடுக்குறது எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி..:)

நன்றி ஆஷிதா..


@ Muniappan Pakkangal

நன்றி டாக்டர் சாப்..:)

Nathanjagk said...

//பொதுவாகவே நமக்கு இந்த 'ஒழுக்க கட்டுப்பாடுகளில்' இருந்து மீறி 'தப்பை' செய்வதில் ஆர்வம் இருக்கும், ஆனால் சமூக கட்டுப்பாடுகள் காரணமாக அடக்கியே வாசிப்போம். அதையும் மீறி யாராவது செய்தால் அதை 'தெரிந்துகொள்வதில்' ஒரு ஆர்வம் காட்டுவோம்//

கிர்ர்ன்னு இருக்கு வினூ..! சபாஷ்!

குமரை நிலாவன் said...

திங்கள் இனிதே நண்பா

அன்புடன் மலிக்கா said...

நல்ல தகவல்கள் வினோத்..

வினோத் கெளதம் said...

@ ஜெகநாதன்..

நன்றி தலைவா..

@ குமரை நிலாவன்

நீண்ட நாட்களுக்கு பிறகு வந்துருக்கிங்க..நன்றி நண்பா..

@ அன்புடன் மலிக்கா ..

நன்றிங்க..:)