Sunday, January 3, 2010

திங்கள் இனிதே - 5

இன்னும் அப்படியே தான் இருக்கின்றேன்..பெரும்பாலும் செய்யும் சின்ன சின்ன தவறுகளை மறைக்கிறேன், தவறை நியாயப்படுத்த மேலும் வாதிடுகிறேன், மேலும் புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள எப்பொழுதும்போல் மனம் மறுக்கிறது. அன்று எதிர்ப்பாரமால் என்னுடுய மேலாளார் காலையில் வந்தவுடனே என்னை அழைத்து ஏதோ கேட்க..நானும் எப்பொழுதும்போல் எதோ ஒரு காரணம் சொல்ல, வழக்கம்போல் ஆரம்பித்தது 'பஜனை'..வருடத்தின் முதல் நாள் அலுவலகத்தில் இனிதே தொடங்கியது. இப்ப தான் 2000 வருடம் ஆரம்பித்த மாதிரி இருக்கு அதுக்குள்ள பத்து வருஷம் ஆகிடுச்சு ..ஆனா பத்து வருஷத்துக்கு முன்னாடி இருந்த அதே மனநிலை..வயசாகுது, பொறுப்பு வரனும் இன்னும் இதேப்போல் நிறைய வருஷங்கள் இருந்தாலும்..ம்ம்ஹும்..வாய்பே இல்லை அப்படியே தான் போகப்போகிறது இந்த வருடமும்.. பார்ப்போம்..!!
...................................................................................................................................

Zee Tamilலில் தமிழர் பார்வையில் இரண்டு வாரமாக 'ராஜீவ் கொலை வழக்கு' என்ற புத்தகத்தின் ஆசிரியர் முன்னாள் சிபிஐ அதிகாரி திரு.ரஹோத்தமன் அவர்களின் பேட்டி ஒளிப்பரப்பானது. அவரோடைய பேட்டி சுவாரசியம் என்றாலும் ஒரு முன்னாள் பிரதமரின் படுகொலை விஷயத்தில் நம் நாட்டின் உளவு அமைப்பு வேண்டுமென்றே மிகப்பெரிய கோட்டை விட்டு இருக்கிறதோ என்கின்ற ரீதியில் இருந்தன.அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பல அதிகாரிகளை நேர்மையாக இயங்கவிடவில்லை என்றும்,வேண்டுமென்றே அன்று பல சாட்சிகள் மறைக்கபட்டதாகவும், பலப்பேரை தப்பிக்க விட்டதாகவும் சொன்னார்.ஆனால் பல விஷயங்களை வெளிப்படையாக பேசினார் என்றே சொல்லவேண்டும். அவர் சொன்ன இன்னொரு விஷயம்.."ஆஷியாவின் மிகப்பெரிய நாடு என்று சொல்லிகொள்கின்றோம்..ஆனால் உளவுத்துறையால் கூட நேர்மையாக முழுவீச்சில் இயங்க முடியவில்லை அதுவும் இறந்தது முன்னாள் பிரதமர்..இன்றளவும் பூசி மொழுகும் வேலையே தான் செய்துக்கொண்டு இருக்கிறது உளவுத்துறை"..என்று முடித்தார்.
..............................................................................................................................................................................................

அரைக்குறையாக வெந்த அரிசியை சாப்பிடவது உடம்புக்கு ஒரு விதத்தில் நல்லது தானாம்..அது ஒரு வகையான ருசியை தரும் என்று சொல்கிறார்கள். தொடர்ந்து அரிசியை முழுசாக வேக வைத்து சாப்பிடுபவர்கள் இதைப்போல் ஒரு முறை சாப்பிட்டு பார்க்கலாம். கம்போடியா நாட்டில் கூட இதேப்போல் உணவுப்பழக்க வழக்கம் நடைமுறையில் இருப்பதாக தெரிந்துக்கொண்டேன்( போன வாரம் அரைகுறையாக வெந்த சாதத்தை வேற வழியே இல்லாமல் வேண்டா வெறுப்பாக சாப்பிட்டப்பின் நெட்டில் தேடி கண்டுப்பிடித்து படித்தது).
...........................................................................................................................................................................................
பெரும்பாலனவர்கள் ஏற்கனவே 2009ல் வெளிவந்த படங்களை பற்றி எழுதி விட்டதால்..ச்சும்மா ஒரு கணக்கு எடுத்தேன் யார் யாருக்கு எந்த படம் பிடித்தது என்று போன வருடம் வெளிவந்த படங்களில் பதில்கள் இதோ :

கிஷோர் : ஈரம்
கலையரசன் : வெண்ணிலா கபடிக்குழு
சென்ஷி & நான் ஆதவன் : பசங்க
கார்த்திகேயன் (அறிவுத்தேடலும்) : பேராண்மை.

எனக்கும் இந்த படங்கள் எல்லாம் பிடித்து இருந்தது..அதுவும் 'பசங்க' தான் மிகவும் பிடித்து இருந்தது. ஏன்டா இது ஒரு கணக்குனு எடுத்துக்கிட்டு உக்கார்ந்து இருந்தியே வேற வேலைவெட்டி இல்லையா என்று கேட்க நினைப்பவர்களுக்கு "சாரி..ராங் நம்பர்"..:)
...............................................................................................................................................................................

போன வாரம் எதோச்சையாக பேப்பரில் எதோ தமிழில் எழுதி பார்த்தேன்..எதோ வித்தியாசமாக படவே மறுப்படியும் எழுதினேன் அதே வார்த்தைகளை அப்பொழுது தான் கவனித்தேன் எப்படி எழுதி இருக்கிறேன் என்று..veetil anaivarum nalamaa என்பதை ஆங்கிலத்திலேயே எழுதி உள்ளேன் எல்லாம் 'கூகிள் இன்டிக்'னால் ஏற்ப்பட்ட பாதிப்பு.
...................................................................................................................................................................................

டிஸ்கி: திங்கள் இனிதே சீசன்-2 என்று தான் பெயர் வைக்கலாம் என்று பார்த்தேன்..ஆமாம் முன்னாடி சீசன்ல அப்படியே எழுதி கிழிச்சிட்ட பாரு என்று சொல்லுவிர்கள் என்று தெரியும்..அதனால் அப்படியே கன்டினியு பண்ணுறேன்..

34 comments:

Nathanjagk said...

வினு,
வ​ரைவான ந​டை, ​வெகு ​தெளிவான கருத்துக்கள்.. விளாசுங்க!!!
அரைக்குறையாக வெந்த அரிசியை சாப்பிடவது ​போல படித்து விடுகி​றேன் இந்த இடு​கை​யை!!! ஹிஹி!!

இராகவன் நைஜிரியா said...

ரொம்ப நல்லா இருக்கு திங்கள் இனிதே... இனிமை + அழகு..

அரைகுறை அரிசியா... ஏற்கனவே வீட்டில் அரைகுறை என திட்டு வாங்குவது போதாதா.. இது வேறவா?

பாலா said...

அந்த டிஸ்கி மட்டும் இல்லீன்னா..... :) :) :)

====

நான் எழுதறதெல்லாம் இல்லை. ஆனா இப்ப இங்க்லீஷ்ல அடிச்சாலும் அதே பிரச்சனை வருது. வார்த்தையின் ஸ்பெல்லிங்கிற்கு பதிலா.. ஃபொனிடிகா ட்ரை பண்ணுறேன். பேட்.. பேட்..!

மாத்த ஒரே வழி.. தமிழ் டைப்ரைட்டிங் கத்துக்கறதுதான்.

==

உங்களுக்காவது வெந்த அரிசி, வேகத அரிசிக்கெல்லாம் வித்தியாசம் தெரியுது. எனக்கு சுத்தம்.
===

புள்ள என்னென்னமா திங்க் பண்ணுது!! :) :)

பாலா said...

பப்பு,

நோட் பண்ணிகிட்டே இருக்கேன். ஓட்டு விழலை???????!!!!!!

ப்ரியமுடன் வசந்த் said...

பச்சை பச்சையா சாப்ட்டே இந்த கலையரசன் இன்னும் உசிரோட இருக்கான் நீ அரை குறையா தான சாப்ட்ட ஒண்ணும் ஆவாது மச்சி திங்கள் இனிதே....!

பா.ராஜாராம் said...

அருமை வினோ!

kishore said...

//இன்னும் அப்படியே தான் இருக்கின்றேன்//

10 வருஷமாவா? யோசிச்சி பாரு அது முன்னாடியும் அப்படி தான் இருந்துருப்ப..
அதாவது 10 வயசு பையனோட மெண்டாலிட்டி தான் 30 வருஷமா இருக்கு. 30 வருஷமா திருந்தாதவன் திடிர்னு திருந்த முடியாது மச்சான்.. அதெல்லாம் கூடவே பொறந்தது.
ஆனா சில "விஷயத்துல" மட்டும் "திவாரி" ரேஞ்சுக்கு யோசிக்கிற அது மட்டும் தான் எப்படின்னு புரிய மாட்டுது .2010 க்கு வாழ்த்துக்கள். :)


//அரைகுறையாக வெந்த சாதத்தை வேற வழியே இல்லாமல்//

சமைக்க தெரியுலங்கறத எவ்ளோ அழகா மேட்ச் பண்ணி இருக்கான் பாருங்க..

//யார் யாருக்கு எந்த படம் பிடித்தது//

ஓ...! இதுக்கு தான் பிடிச்ச படம் சொல்லுன்னு ரெண்டு நாளா அழுகாச்சியா?

//.veetil anaivarum nalamaa //

உண்மைதாண்டா .. வர வர தமிழ் எழுத்து எல்லாம் மறந்துடும் போல இருக்கு..

மொத்தத்தில் உண்மையாவே அருமையான தொகுப்பு.. :)

புலவன் புலிகேசி said...

கருத்துக்கள் தெளீவாக விளக்கப்பட்டு இனிதாக இருந்தது. உளவுத்துறை என்றூ இல்லை இந்த கேடுகெட்ட அரசியல் இருக்கும் வரை எந்த துறையும் செயல்படாது...

சென்ஷி said...

போன வருசத்தோச நல்ல படம்ன்னு பார்த்தா அது பசங்க தான் :)

திங்கள் இனிதே... மிக இனிதே..!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

புத்தாண்டை இனிதாக ஆரம்பித்துள்ளீர்கள் :)

தமிழ் உதயம் said...

இன்னும் அப்படியே தான் இருக்கின்றேன்..பெரும்பாலும் செய்யும் சின்ன சின்ன தவறுகளை மறைக்கிறேன், தவறை நியாயப்படுத்த மேலும் வாதிடுகிறேன், ..............இப்படித்தான் உள்ளது- அனேகரின் செயல்பாடுகள். நீங்கள் சொல்லிவிட்டிர்கள்.. நாங்கள் சொல்லவில்லை.

கலையரசன் said...

//போன வாரம் அரைகுறையாக வெந்த சாதத்தை வேற வழியே இல்லாமல்//
அட.. பேசிக்கிட்டே இருக்கசொல்லோ.. நீ சாதம் சாப்பிடுவேன்னு பிட்டை போட்டுட்ட பாத்தியா??

ரைட்டு பாஸூ, புத்தாண்டு புதுசுல ஓவரா கும்மக்கூடாது... வாழ்த்துக்கள்!

திங்கள் இனிதே... அடுத்த வாரம் பொங்கல் வருதே..
;-)

Prabhu said...

பப்பு,

நோட் பண்ணிகிட்டே இருக்கேன். ஓட்டு விழலை???????!!!!!!///

ஊரிலே இருக்கமாட்டேன் 3 நாளைக்குன்னு சொன்ன பிறகு ஓட்டு கேட்கும் புண்ணியவானை என்ன செய்யலாம்?

S.A. நவாஸுதீன் said...

அரைகுறையா வெந்த அரிசி மாதிரி சவக் சவக்னு இல்லாம ரொம்ப நல்லாவே இருக்கு திங்கள் இனிதே.

அருமை அருமை

கண்ணா.. said...

முதல் பாரா நச்,

இரண்டாம் பாரா உச்..உச்..

மூணாவது பாரா ப்ச்...( கலை ரூமுலயா சாப்பிட்ட..)

நாலாவது பாரால யாரும் வேட்டைக்காரனை குறிப்பிடாததால் வெளிநடப்பு செய்கிறேன்.....

நாகா said...

ஓ.. இன்னக்கி திங்கக்கிழமையா? நல்லாத்தான் விடிஞ்சிருக்கு :)

Muniappan Pakkangal said...

Pajanai varusham,nalla aarambam thambi.

வினோத் கெளதம் said...

@ ஜெகநாதன் ..

//வ​ரைவான ந​டை, ​வெகு ​தெளிவான கருத்துக்கள்.. விளாசுங்க!!!//

நன்றி தல..

//அரைக்குறையாக வெந்த அரிசியை சாப்பிடவது ​போல படித்து விடுகி​றேன் இந்த இடு​கை​யை!!! ஹிஹி!!//

நன்றின்னு சொல்லி பத்து செகண்ட் கூட ஆகல..தல நீங்க பாரட்டுரிங்களா..இல்லை !!!!..:) :) :)

@ இராகவன் நைஜிரியா

//அரைகுறை அரிசியா... ஏற்கனவே வீட்டில் அரைகுறை என திட்டு வாங்குவது போதாதா.. இது வேறவா?//

தல எப்படி கரெக்டா சொல்லுறிங்க..;)


@ ஹாலிவுட் பாலா

//அந்த டிஸ்கி மட்டும் இல்லீன்னா.//

நல்ல வேளை நான் பிழைத்துக்கொண்டேன் ..;)

//மாத்த ஒரே வழி.. தமிழ் டைப்ரைட்டிங் கத்துக்கறதுதான்.//

தல இது எல்லாம் நீங்க பேசலாம்..நான் கத்துக்க முடியுமா..இப்ப ஆரம்பிச்சாலும் ஒரு வருசம் ஆகுமே..

//உங்களுக்காவது வெந்த அரிசி, வேகத அரிசிக்கெல்லாம் வித்தியாசம் தெரியுது. எனக்கு சுத்தம். //

கொஞ்சம் ஊரு பக்கம் வந்து ஒரு கட்டு கட்டிட்டு போங்க..இல்லை வீட்டோடு ஒரு ஆளை சமையலுக்கு (மட்டும்) ரெடி பண்ணுங்க இப்பொழுதைக்கு..:)

//புள்ள என்னென்னமா திங்க் பண்ணுது//

யாரு நான் அது சரி..;)

//நோட் பண்ணிகிட்டே இருக்கேன். ஓட்டு விழலை?//

ஆச்சரியம் பப்பு வோட்டு போட்டாச்சு..!!

வினோத் கெளதம் said...

@ பிரியமுடன்...வசந்த்

//பச்சை பச்சையா சாப்ட்டே இந்த கலையரசன் இன்னும் உசிரோட இருக்கான்//

ஆமாம் எப்படி சரியா அவன் மெனுவா நீ சொல்லுற..:)

@ பா.ராஜாராம்

நன்றி வாத்தியாரே..:)

@ Kishore

//30 வருஷமா திருந்தாதவன் திடிர்னு திருந்த முடியாது மச்சான்.. அதெல்லாம் கூடவே பொறந்தது.//

எப்படி உங்க ஊர்ல எல்லாம் வயச ரவுண்டா தான் சொல்லுவிங்களா..டேய் உன் கூட இருக்கறதால உன் வயசும் என் வயசும் ஒன்னா..

//சமைக்க தெரியுலங்கறத எவ்ளோ அழகா மேட்ச் பண்ணி இருக்கான் பாருங்க..//

ஊருக்கு வந்து உனக்கு ஒரு தடவை சமைத்து போட்டா தான் அடங்குவ போல இருக்கு..

வினோத் கெளதம் said...

@ புலவன் புலிகேசி

//உளவுத்துறை என்றூ இல்லை இந்த கேடுகெட்ட அரசியல் இருக்கும் வரை எந்த துறையும் செயல்படாது...//

நச்ன்னு சொன்னிங்க..

@ சென்ஷி

ரைட்டு ..ஊருக்கு போய் சேர்ந்ததும் லெட்டர் போடுப்பா..:)

@ ச.செந்தில்வேலன்

நன்றி செந்தில்..உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்..:)

வினோத் கெளதம் said...

@ tamiluthayam

நன்றிங்க..:)

@ கலையரசன்

//நீ சாதம் சாப்பிடுவேன்னு பிட்டை போட்டுட்ட பாத்தியா??//

அன்னிக்கு உன் கூட சேர்ந்து ஒரே ஒரு நாளு கொஞ்சம் புண்ணாக்கு சாப்பிட்டேன்..அதுக்காக எப்பொழுதும் அதை சாப்பிட முடியுமா..;)

@ pappu

இந்த ரணக்களத்துலயும் வோட்டு போட்டு இருக்க பாரு உன்னை வாழ்த்த வயது இல்லை வணங்குகிறேன்..:)

வினோத் கெளதம் said...

@ S.A. நவாஸுதீன்

நன்றி தல..:)

@ கண்ணா

உன் குறும்பு இருக்கே ப்ச்,உச்,நச்..;)

@ நாகா

நன்றி நாகா..ஊர்ல இருக்கிங்களா..

@ Muniappan Pakkangal

தேங்க்ஸ் டாக்டர்..

☀நான் ஆதவன்☀ said...

திங்கள் இனிதே இனிதே! :)

Thenammai Lakshmanan said...

டிஸ்கிதான் ரொம்ப சூப்பர் வினோத் :-))

வெற்றி-[க்]-கதிரவன் said...

//அதுவும் 'பசங்க' தான் மிகவும் பிடித்து இருந்தது. //

-:)) me toooooooooo

வினோத் கெளதம் said...

@ ☀நான் ஆதவன்☀

//திங்கள் இனிதே இனிதே//

டேய் பதிவை படிச்சு கம்மென்ட் பண்ணுன்னா தலைப்ப மட்டுமா படிச்சு கம்மென்ட் பண்ணுற..பிச்சு பிச்சு..:)

@ thenammailakshmanan..

நீங்களும் டிஸ்கிய மட்டும் தான் படிச்சிங்களா..:) :).

@ வெற்றி-[க்]-கதிரவன்

நன்றி மச்சி..

geethappriyan said...

வழமையான இனிமை குரு உன் திங்கல் இனிதே, லேட்டா வந்ததுக்கு மன்னிக்கனும், டேஷ்போர்டில் வரவில்லை, வாக்குகள் அளிக்கப்பட்டன

அன்புடன் மலிக்கா said...

அழகுத்திங்கள் அட்டகாசம். சூப்பர்..

நேரம்கிடைக்கும்போது இதையும் பார்க்கவும்

http://fmalikka.blogspot.com/

Viji said...

I really liked the first piece! What a way to start the year at work!!!!

Happy New Year:-).

வினோத் கெளதம் said...

@ கார்த்திக்கேயனும்

வருகைக்கு நன்றி குரு..

@ அன்புடன் மலிக்கா

நன்றி..கண்டிப்பாக பார்க்கிறேன்..:)

@ Viji

Ha ha ha..Thanks viji.
Happy new year..:)

Prathap Kumar S. said...

ராஜீவ் கொலையில் உளத்வுத்துறையின் கவனக்குறைவுதான் காரணம் என்பதில் சந்தேகமே இல்லை. இந்தாருக்குற இலங்கைல போடப்படும் பிளானைகூட இவனுங்களால கண்டுபிடிக்க முயலைன்னா...??? என்னத்த சொல்ல... இவனுங்க வேலை செய்யற லட்சணத்தைதான் மும்பை தாக்குதலிலும் பார்தோமே..எல்லாம் வெட்டிப்பயலுக...

அரைக்வேக்காடு அரிசியைசாப்பிட்டா சொம்பை தூக்கிட்டு அலைவேண்டியதுதான் கண்ணு...ஏன் இந்தமாதிரில்லாம் உனக்கு ஆசைவருது.

டிஸ்கி போட்டதனாலே தப்பிச்ச மச்சி...:-)

வினோத் கெளதம் said...

@ 'நக்கல்' நாஞ்சில்

//இந்தாருக்குற இலங்கைல போடப்படும் பிளானைகூட இவனுங்களால கண்டுபிடிக்க முயலைன்னா...??? என்னத்த சொல்ல...//

கண்டுபிடிக்க முடியலன்னு சொல்லல..தெரிஞ்சும் விட்டுடாங்க..
இதுல யாரு யாரு Involved அப்படிங்கிறது
இன்னிக்கு வரைக்கும் கேள்விக்குறி..ஒட்டுமொத்தமா பழி LTTE மேல தானே இருக்கு..சிவராசனையே உயிரோடு பிடித்து இருந்து இருக்கலாம்..உயிரோடு பிடிக்காமல் போனதற்கு காரணம் !! அங்க தானே இடிக்குது..

PPattian said...

இனிதே.. இந்த தொகுப்பும்

//போன வாரம் அரைகுறையாக வெந்த சாதத்தை வேற வழியே இல்லாமல் வேண்டா வெறுப்பாக சாப்பிட்டப்பின் நெட்டில் தேடி கண்டுப்பிடித்து படித்தது//

இதையெல்லாமா நெட்டில தேடுவாய்ங்க :)

வினோத் கெளதம் said...

@ PPattian : புபட்டியன்

நன்றிங்க..
ஒரு ஆர்வத்தில் தேடிப்பிடித்து பார்த்தேன்..:)