Thursday, June 11, 2009

மழைக்கால இரவுகள்..


ஒரு மழை கால இரவில்தனிமையில் சென்று கொண்டு இருந்தேன்..சில நினைவுகளின் சில தூரல்களுடன்..என் மனதில் அழமாய் படிந்து விட்ட உன் நினைவுகளுடன்..
என் நினைவு அலைகளை காலில் பட்ட நீர் அலைகள் கலைத்தது..

யாரோ இருவர் தூரத்தில் குடை பிடித்து நிற்கின்றனர்..இன்னும் சிலர் வண்டியில் வேகமாய் செல்கின்றனர்..
“சோமாரி பாத்து போக மாட்டியா”..திட்டியவனை பார்த்து சிரித்தேன்..
“மூஞ்ச பாரு”..மறுபடியும் சிரித்தேன்..

இன்னும் தூறல் வேகமாக..மழையாக..
சாலையில் அனைவரும் ஒதுங்க..
என்னை மட்டும் இன்னும் வேகமாக வழி நடத்தி கொண்டு இருந்தது உன் நினைவுகள்..
நடந்தேன்..
சாலையின் பள்ளத்தின் கால் வைத்து குப்புற விழுந்தேன்..ஓடி வந்த சில பேர் தூக்கி விட்டனர்..

“தம்பி பாத்து போலாம்ல” ..தூக்கி விட்ட பெரியவர் என்னை பார்த்து சொல்ல .. மறுபடியும் சிரித்தேன்..
பக்கத்தில் இருந்த பூத்தில் ஒரு பெண்
” ஏன்டா போன் பண்ண மாட்டியா செல்லம்”..ஆமாம் பெண் தான் ..உற்று பார்த்த என்னை பார்த்தாள்..
”சரி வீட்டுக்கு போய் Missed call கொடுக்குறேன் பேசு தெரியுதா”..மறுபடியும் அவள்..போனை வைத்து விட்டு..என்னை பார்த்தாள்..சிரித்தேன்..அவள் முறைத்தாள்..

சேறும் சகதியும் பரவி கிடந்த சட்டையுடன் எங்கோ நின்று கொண்டு இருந்தேன்.. மொபைல் சிணுங்கியது..எடுக்க முயன்றேன்..இல்லை..

“போன் இந்தங்ண்ணா..ஒரே சேத்து தண்ணி..அதான் தொடச்சேன் இந்தாங்க”..அழுக்கு சட்டை பையன்..
மொபைல் லை என் கையில் தந்தான்..மொபைல் சிணுங்கி கொண்டு தான் இருந்தது..எடுத்தேன்..

அப்பா “எங்கடா இருக்க..மழை நல்ல பெயுது..சீக்கிரம் வந்துடுவில்ல..”
“ம்ம்ம்…”
மொபிலை அணைத்தேன்..

“தம்பி இந்தப்பா “.. தூக்கி விட்ட பெரியவர் கையில் டீயுடன் நின்று கொண்டு இருந்தார்.வாங்கி கொண்டு அவரை பார்த்து சிரித்தேன் டீக்கடையில் நின்று கொண்டு இருந்தோம்.
“தம்பி பாத்து போப்பா”.. என்றார்..
மறுபடியும் நடக்க தொடங்கினேன்..

”ஏய் செல்லம் சீக்கிரம் போடா மழை இன்னும் அதிகம் ஆவும் போல இருக்கு”..உன் குரல் என்னை பின் தொடர்ந்தது..

வீட்டு கதவை திறந்தேன்..
அப்பா பார்த்தார்..
“என்னடா இந்த கோலத்துல வர”..வாசலுக்கு போனவர் திரும்பி வந்தார்..
“பைக் எங்கடா”..
“பஞ்சர்”..உள்ளே போனேன்..

தம்பி எதிர்பட்டான்..சிரித்தேன்..வேகமாக போன என் தம்பி அப்பாவிடம் கத்தினான்..
அறையில் நுழைந்தேன்..குளித்தேன் ..துணியை மாற்றினேன்..
அப்பா வந்தார்..
” சாப்டியடா”..
“ம்ம்ம்ம்”..
அப்பாவை நோக்கினேன் அவருடைய கண்கள் தழும்பி இருந்தது..

கதவை சாத்தி விட்டு சென்றார்..பாயயை விரித்து படுத்தேன்..திரும்பினேன்.. அருகில் நீயும் படுத்து இருந்தாய்..

“ஏன்டா செல்லம் தூக்கம் வரலியா”..
“ம்ம்ம்ம்”..மறுபடியும் நான்..
“கண்மூடி எந்த சிந்தனையும் இல்லாம தூங்கு தூக்கம் வரும்..”

இன்று அவளிடம் எப்படியாவது சொல்லி விட வேண்டும்..

“யே”..
“என்னடா”..
“என்னால ரெண்டு பேர மட்டும் அவளோ சீக்கிரத்துல மறக்க முடியாதுடி”..
“தெரியும்.. ஒன்னு சின்ன வயுசுல செத்து போன உங்க அம்மா”..
“இன்னொன்று..”
"3 மாசத்துக்கு முன்னாடி செத்து போன நான் கரெக்டா”..
“ம்ம்ம்ம்..”

அவளும் அதை உணர்ந்து தான் இருந்தால் போல் இருக்கு..
கலங்கி இருந்த அவள் கண்களை துடைத்து விட்டேன் ..ஏனோ இந்த முறை என்னால் எப்போதும் போல் சிரிக்க முடியவில்லை ..

38 comments:

கண்ணா.. said...

பைத்தியகாரன் அண்ணாச்சி கதை எழுத சொன்னாலும் சொன்னாரு.....எல்லாரும் பையித்தியமாவே ஆய்ட்டாங்க....

:(

கண்ணா.. said...

//“சோமாரி பாத்து போக மாட்டியா”..திட்டியவனை பார்த்து சிரித்தேன்..
“மூஞ்ச பாரு”..மறுபடியும் சிரித்தேன்//

மறுபடியும் சிரித்தேன்..

மறுபடியும் சிரித்தேன்..

மறுபடியும் சிரித்தேன்..


ஆமாம் உண்மைதான்.. நா முதல்ல போட்ட கமெண்ட் கரெக்ட்தான்..


பதிவர் சந்திப்புக்கு வரும்போதெல்லாம் நல்லாதான இருந்த வினோத்து....

வினோத் கெளதம் said...

நான் மட்டும் ஆனா போதுமா..எல்லோரையும் பைத்தியம் ஆக்க வேண்டாமா..
வேற என்னங்க பண்றது இன்னிக்கு வேலை இல்லை..உருப்படிய எதாச்சும் பண்ணலாம்னு பார்த்த..வாய்பே இல்லை..அதன் ப்ளாக்ல இன்னொரு கதை..

வினோத் கெளதம் said...

//ஆமாம் உண்மைதான்.. நா முதல்ல போட்ட கமெண்ட் கரெக்ட்தான்..


பதிவர் சந்திப்புக்கு வரும்போதெல்லாம் நல்லாதான இருந்த வினோத்து....
//

ஹா.ஹா..ஹா..ஆமாம் ஆமாம் அன்னிக்கு வரைக்கும் ஒழுங்கா தான் இருந்தேன் அந்த மோர் குழம்பு சாப்டேன் பாருங்க அன்னிக்கு இருந்து தான் இப்படி..
சத்தியாயமா ரொம்ப போர் அடிக்குதுங்க எங்கயாச்சும் ப்ளாக் பிரீயா இருந்த சொலுங்க பொய் கும்மி அடிப்போம்..:))

வினோத் கெளதம் said...

இன்னிக்கு ஒரு முடிவுல தான் இருக்கேன் இன்னும் ரெண்டு கத வேற போஸ்ட் பண்ணனும்..

Anonymous said...

ஒரு வரி கருவை வைத்து நல்லா எழுதியிருக்க வினு....

கடைசியா கஷ்டமாயிருந்தது...கதை நல்லாயிருக்கு....அமைப்பு நடை எல்லாம் நல்லாயிருக்கு....

வினோத் கெளதம் said...

தொடர் ஆதரவுக்கு நன்றி தமிழ்..:)

கலையரசன் said...

தொடர் பதிவுக்கு நன்றி!
பின்ன... டெய்ய்ய்ய்லி கதை சொன்னா இப்டிதான்!

உன் கதையில பினிஷ்சிங் டச் இருக்கு! (விக்ரமன் டச் இல்ல)

ஆனா, எனகொரு உண்ம தெரிஞ்ஜாகனும்..
லவ் பன்னாம இப்டி கதை எழுத முடியாது!
கண்ணா கிட்ட உண்மையை சொல்லிடு,
அவன் அத பத்தி பதிவெழுதி அசிங்க படுத்த மாட்டான்!

கண்ணா.. said...

//கலையரசன் said...

கண்ணா கிட்ட உண்மையை சொல்லிடு,//

ஏண்டா .... நான் என்ன மீடியேட்டரா...

எனக்கே ஃபிகரு மடிய மாட்டுக்கேன்னு ஃபீலீங் இருக்கும்போது இதுவேறயா...!!!!

வினோத் கெளதம் said...

//உன் கதையில பினிஷ்சிங் டச் இருக்கு! //

உன் Commentsக்கு பயந்துக்கிடே இருந்தேன் எப்ப juz esCApE...

//ஆனா, எனகொரு உண்ம தெரிஞ்ஜாகனும்..
லவ் பன்னாம இப்டி கதை எழுத முடியாது!//

ஒரு பைத்தியத்த பத்தி கதை எழுதுனா அவன் பைத்தியக்காரனா தான் இருக்குனுமா என்ன..

எப்படியோ பதில் சொல்லிட்டேன்..:)

வினோத் கெளதம் said...

@ Kanna..

//எனக்கே ஃபிகரு மடிய மாட்டுக்கேன்னு ஃபீலீங் இருக்கும்போது இதுவேறயா...!!!!//

ஊருக்கு எப்ப போறதா சொன்னிங்க முக்கியமான தகவல் ஒருதங்கக்கிட சொல்ல வேண்டியது இருக்கு..

வெற்றி-[க்]-கதிரவன் said...

//ஒரு மழை கால இரவில்தனிமையில் சென்று கொண்டு இருந்தேன்..சில நினைவுகளின் சில தூரல்களுடன்..என் மனதில் அழமாய் படிந்து விட்ட உன் நினைவுகளுடன்..//

-:)

மச்சி ரொம்ப நல்லா... ரொம்ப பீலிங்க்ஸ்சா எழுதிருக்க :(

அழகான தலைப்பு

அற்புதமான நடை

நல்லாறு லவ் பீலிங்க்ஸ்சோட...

*******

நாடி நரம்பு.. கனவு,,, நினவு.. எல்லாம் காதல் ஊறி போன ஒருத்தனால தான் இப்படி எழுத முடியும்.

வினோத் நீங்க யார்

சொலுங்க...
சொல்லுங்க..
சொல்லுங்க...

வினோத் கெளதம் said...

@ பித்தன்..

//மச்சி ரொம்ப நல்லா... ரொம்ப பீலிங்க்ஸ்சா எழுதிருக்க :(
அழகான தலைப்பு
அற்புதமான நடை
நல்லாறு லவ் பீலிங்க்ஸ்சோட..//

நன்றிகள் பல மச்சி..

//நாடி நரம்பு.. கனவு,,, நினவு.. எல்லாம் காதல் ஊறி போன ஒருத்தனால தான் இப்படி எழுத முடியும்.//

ஆனா நான் எழுதுறேனே எப்படி..

//வினோத் நீங்க யார்

சொலுங்க...
சொல்லுங்க..
சொல்லுங்க...//

எனக்கு பாண்டில இன்னொரு பேரு இருக்கு..
அது..?? வேணா விடு..:)

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//"3 மாசத்துக்கு முன்னாடி செத்து போன நான் கரெக்டா”..//

மிரட்டுறீங்கண்ணா..,

அன்புடன் அருணா said...

கலக்குறீங்க!!!

வினோத் கெளதம் said...

@ SUREஷ் (பழனியிலிருந்து) ..

நன்றி தல..

வினோத் கெளதம் said...

@ அன்புடன் அருணா said...

//கலக்குறீங்க!!!//

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க..

kishore said...

really good machan

வினோத் கெளதம் said...

@ Kishore..

யே மச்சான் நீ வந்து கமென்ட் பண்ணனுமா நமக்குள்ள எதுக்கு இந்த பார்மாலிட்டி..
என்னமோ போடா..

(இதுக்கு நீ என்ன சொல்லுவன்னு தெரியும் )

வால்பையன் said...

தேர்ந்த சிறுகதை போல் நடை!
7ஜி காலணி பாதிப்பு இருந்தாலும் சொல்லும் விதம் அருமை!

kishore said...

தெரியிது இல்ல ? போ போ... போய் வேலைய பாரு

வினோத் கெளதம் said...

வால்பையன் said...

//தேர்ந்த சிறுகதை போல் நடை!
7ஜி காலணி பாதிப்பு இருந்தாலும் சொல்லும் விதம் அருமை!//

நன்றி வால்ஸ்..என்னை அறியமால் அந்த பாதிப்பு வந்து இருக்கலாம்..எனக்கு மிகவும் பிடித்த படம்..

Suresh said...

//யாரோ இருவர் தூரத்தில் குடை பிடித்து நிற்கின்றனர்..இன்னும் சிலர் வண்டியில் வேகமாய் செல்கின்றனர்..
“சோமாரி பாத்து போக மாட்டியா”..திட்டியவனை பார்த்து சிரித்தேன்..
“மூஞ்ச பாரு”..மறுபடியும் சிரித்தேன்..//

ஒரு ரேஞ்சா தான் தீரியுறாங்க என்ன கண்ணா நீ சொன்னது சரி தான் ;) பைத்தியகாரன் அண்ணாச்சி சொன்னது போச்சு இவங்க எல்லாம் பேணாவோடவே திரியுறாங்க

Suresh said...

//"3 மாசத்துக்கு முன்னாடி செத்து போன நான் கரெக்டா”..
“ம்ம்ம்ம்..”//

டேய் பொண்ணா இல்லை ஆவி பேய் காதலித்த ஆதவன் எல்லாம் ஒரு மாதிரியா தான் திரியுரிங்க

சரி சரி ஒரே பீல்ங்ஸ் ஆனா உண்மை என்னா நீ சொல்லபோம் விரிந்த காட்ச்சிகள் எல்லாம் 7ஜி போல் வந்தது தான் டிராபிக்க்

மத்தபடி கதை கருவும், அதை சொன்ன எழுத்தும் முக்கியம சில தூரல்களுடன் .. நினைவு அலைகளை கடல் அலைகள் கலைத்தது..

சூமமா சூப்பர் பட் ;) 7ஜி வந்துட்ச்சு வெரி குட் மச்சான் ;) இப்படியே எழுதினா நீ ஹீரோ இல்லை என் படத்துக்கு கதை ஆசிரியர் ;)

ஆமா கதை எல்லாம் இருக்கா நம்ம படத்துக்கு

தேவன் மாயம் said...

நல்ல கதை!!
இன்னும் 2 எழுதணுமா?

தேவன் மாயம் said...

நல்ல கதை!!
இன்னும் 2 எழுதணுமா?

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்லா இருக்குப்பா.. ரெஇன்போ காலனி எபெக்டா?

ஷண்முகப்ரியன் said...

A simple theme but good presentation,Vinoth.

ப்ரியமுடன் வசந்த் said...

நல்லாயிருக்கு வினோத்


ஃபினிஷிங் டச்

Muniappan Pakkangal said...

Ithu kathai pottikka ? Nice Vinoth Gowtham

வினோத் கெளதம் said...

@ Suresh..

//ஒரு ரேஞ்சா தான் தீரியுறாங்க என்ன கண்ணா நீ சொன்னது சரி தான் ;) பைத்தியகாரன் அண்ணாச்சி சொன்னது போச்சு இவங்க எல்லாம் பேணாவோடவே திரியுறாங்க//

போட்டின்னு வந்துச்சுனா கலந்துக்காம என்ன பண்றது மச்சி..

//மத்தபடி கதை கருவும், அதை சொன்ன எழுத்தும் முக்கியம சில தூரல்களுடன் .. நினைவு அலைகளை கடல் அலைகள் கலைத்தது..

சூமமா சூப்பர் பட் ;) 7ஜி வந்துட்ச்சு வெரி குட் மச்சான் ;)//

7G சாயல் இருக்க..இருக்கலாம்..எனக்கு ரொம்ப பிடிச்ச படம்..நன்றி மச்சி..

//இப்படியே எழுதினா நீ ஹீரோ இல்லை என் படத்துக்கு கதை ஆசிரியர் ;)

ஆமா கதை எல்லாம் இருக்கா நம்ம படத்துக்கு//

கதை ஆசிரியர் வாய்ப்பு கொடுத்தலே போதும் கலக்குவோம்..
கதை இருக்கவா உனக்கு என்ன கதை வேண்டும் சொல்லு..

வினோத் கெளதம் said...

@ thevanmayam said...
//நல்ல கதை!!
இன்னும் 2 எழுதணுமா?//

நன்றி சார்..நான் சும்மா சொன்னேன் இன்னும் ரெண்டு கதை எழுத வேண்டும் என்று..

வினோத் கெளதம் said...

@ கார்த்திகைப் பாண்டியன் said...
//நல்லா இருக்குப்பா.. ரெஇன்போ காலனி எபெக்டா?//

நன்றி கார்த்தி..7G effect இருக்கா..!!

வினோத் கெளதம் said...

@ ஷண்முகப்ரியன் said...
//A simple theme but good presentation,Vinoth.//

Thanks sir..:)

வினோத் கெளதம் said...

@ பிரியமுடன்.வசந்த் said...
//நல்லாயிருக்கு வினோத்
ஃபினிஷிங் டச்//

நன்றி வசந்த்..

வினோத் கெளதம் said...

@ Muniappan Pakkangal said...
//Ithu kathai pottikka ? Nice Vinoth Gowtham//

இது கதை போட்டிக்கு இல்லை சார்..நன்றி..:)

வினோத் கெளதம் said...
This comment has been removed by the author.
Vishnu - விஷ்ணு said...

கதை சொன்ன விதம் சூப்பருங்கோ...